சென்னை, ஜன.4 வேலை நிறுத்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு துறை யின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
இது தொடர்பாக அவர் 3.1.2023 அன்று விடுத்த அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலா ளர்களின் பல்வேறு பிரச் சினைகள் தீர்க்கப்பட வேண் டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலி யுறுத்தி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் 14ஆ-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. தொழி லாளர்களை நிர்கதியாக நிற்கவைத்ததோடு, எந்த கோரிக்கைகளும் ஏற்கப்பட வில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகர மாக நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக அதிமுக ஆட்சி யில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீர மைக்கப்பட்டு “பே மேட்ரிஸ்” விகிதப்படி ஊதியம் வழங் கப்படுகிறது. 5 சதவீதம் அள வுக்கு ஊதியமும் உயர்த்தப் பட்டது. இவை அனைத்தும் எந்த போராட்டமும் நடத் தாமல், எந்த ஒடுக்குமுறை யையும் சந்திக்காமல் தொழி லாளர்களுக்கு கிடைத்தவை.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை எவ் வளவு சீரழிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந் தது. ஆனால், மகளிர் கட்ட ணமில்லா பயணத்துக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2,800 கோடி ஒதுக்கி, டீசல் மானிய மாக ரூ.2,000 கோடியும், மாணவர் இலவச பயணத் துக்காக ரூ.1,500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் நம் முதல மைச்சர் யாரும் கோரிக்கை வைக்காமலேயே தீபாவளி போனஸை மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூ.16,800 வழங்கியவர் நம் முதல மைச்சர்தான்.
பேரிடர் நேரத்தில் உட னடியாக களம் இறங்கி பேருந்துகளை வழக்கம்போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்குவர முன்நின்றவர்கள் போக்குவரத்து துறை தொழி லாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதல மைச்சருக்கும், பொது மக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டு கிறேன்.
எனவே, பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கு உரிய நடவடிக்கை களை இந்த அரசு மேற் கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளை யும் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போக்குவரத்துக் கழ கத்தை சார்ந்த தொழிற்சங் கங்கள் மற்றும் தொழிலா ளர்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment