உடல் நலன் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

உடல் நலன் விசாரிப்பு

featured image

உரத்தநாடு, ஜன. 24- உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உரத்தநாடு தெற்கு ஒன்றியம் பூவத்தூர் தனது இல்லத்தில் ஓய்வில் உள்ள கழக தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை, இராம சாமியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

17.01.2024 அன்று மாநில திராவிடர் கழக ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை, இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு, அய்யனார், தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட கழக செய லாளர் அ. அருணகிரி, தஞ்சை மாவட்ட கழக துணைச் செயலாளர், அ.உத்திராபதி, தஞ்சை மாநகர கழகத் தலை வர், பா. நரேந்திரன், உரத்த நாடு நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன் ஆகி யோர் பூவத்தூர் ராமசாமி இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தனர்.

அவரது வாழ்வியல் மற் றும் மகள் தென்றல், மருமகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment