உடலுறுப்புக் கொடை - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

உடலுறுப்புக் கொடை - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

featured image

ஒசூர் திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் மு.லட்சுமிகாந்தன் மறைவு
உடலுறுப்புக் கொடை – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

ஒசூர், ஜன. 26- ஒசூர் ஒன்றிய கழக அமைப்பாளர் மு.லட்சுமிகாந்தன் (வயது 69) உடல்நலம் பாதிக்கப் பட்டு ஒசூர் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டது.

இந்நிலையில் அவரது குடும்பத் தினர் விருப்பபடி லட்சுமிகாந்தன் உடலுறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டது.
அரசு வழிகாட்டுதலின்படி அவர் உடலிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஒசூர் காவேரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் இருந்த ஒரு நோயாளிக்கும் மற்றொரு சிறு நீரகம் மற்றும் கல்லீரல் மேல்மருவத் தூர் அருள்மிகு ஆதிபராசக்தி மருத் துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடலுறுப்பு கொடை வழங்கிய லட்சுமிகாந்தன் உடலுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ஒசூர் சாராட்சி யர் செல்வி-பிரியங்கா, ஒசூர் வட் டாட்சியர் கு.சுப்பிரமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து மாவட்ட கழக தலைவர் சு.வன வேந்தன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடமணி, மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவன தலைவர் க.மா.இளவரசன், திமுக சார்பில் ரெட் சுரேஷ், தேவராஜ், கழக பொதுகுழு உறுப்பினர் அ.செ.செல்வம்,மாவட்ட செயலா ளர் மா.சின்னசாமி, கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் க.மாணிக் கம், இந்திய மனித உரிமைக் கட்சி தருமபுரி மாவட்ட தலைவர் கதிர் மாரியப்பன், ஜெ.ஆர்.பி.சி. மாநில பொருளாளர் முத்துசாமி, பிரச் சார செயலாளர் தீ.தேவேந்திரன் ஆகியோர் லட்சுமிகாந்தனின் கழக செயல்பாடுகளையும்,அவரது மனிதநேய பணிகளையும் நினைவு கூர்ந்து இரங்கலுரையாற்றினர்.
அதன்பின் லட்சுமிகாந்தன் சொந்த ஊரான ஆரணி அடுத் துள்ள மேல்சிசமங்கலம் கிராமத் தில் இறுதி நிகழ்வுக்காக கழக தோழர்கள் வீரவணக்க முழக்கத் துடன் அனுப்பி வைக்கப்பட்டது. 25.1.2024 அன்று இறுதி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்தேசிய பேரியக்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.மாரிமுத்து,நகர தலைவர் முருகபெருமாள், அய்.டி. சி. சிகரெட் கம்பெனி தொழிலாளர் கள், காவேரி மருத்துவமனை ஊழி யர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத் தினர்.

No comments:

Post a Comment