சேலம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சேலம், ஜன. 10- தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி சேலம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாணவர்களுக் கான பேச்சுப் போட்டி 28.12.2023 அன்று தமிழ்ச்சங்க க.இராசா ராம் அரங்கில் நடை பெற்றது.
அந்த நிகழ்வில் ப.க. மாவட்ட செயலர் சுரேசு குமார் வரவேற்புரை நல்கிட, மாவட்டத் தலைவர் வீரமணிராசு தலைமை ஏற்றிட, திராவிடர் கழக மாநில அமைப்பாளர் பாலு, ப.க. மாநில அமைப்பாளர் மாயக் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாநில பொதுச்செயலாளர் தமிழ் பிரபா கரனும், புகழ்ச்செல்வி இதழ் ஆசிரியர் பரணிப்பாவலனும் நோக்கத்தின் பொழிவுரை ஆற்றிட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணாக்கர் எல்லாம் தந்தை பெரியார் கல்லடி சொல்லடிப்பட்டு பெண்களின் முன்னேற் றத்திற்காக வும் சூத்திரன் என்ற இழிப்பெயரை நீக்குவதற்காகவும் எவ்வ ளவோ இழிவினைத் தாங்கி நமக்காய் உழைத்தார் என்றும், தந்தை பெரியார்தான் பெண்களும் தமிழர்களும் தலைநிமிர்ந்து நடக்க உதவினார் என்றும் பேசி அரங்கத்தையே அதிர வைத்தனர்.
8 கல்லூரியிலிருந்து 48 மாணாக் கர்கள் வந்தனர். வந்தவர்களில் பெண் மாணாக்கர் 41, எஞ்சியுள்ள எழுவர் ஆண் மாணாக்கர்.
நிகழ்வில் நடுவர்கள் என்று யாரையும் தனியாக வைக்காமல் வந்திருந்த மாணாக்கர்களையே நடுவர்களாக நியமித்து அவர்க ளையே பேசும் ஒவ்வொரு மாணாக் கரின் பேச்சுத் திறன் ஒலிப்பு முறை கருத்தியல் மெய்ப் பாடு என்று மூன்று வகையில் மதிப்பெண் போடப்பட்டு தேர்வு செய்யப் பட்டனர். வந்தி ருந்த மாணாக்கர் எல்லாம் சற்றொப்ப சரியான மதிப்பீடு செய்ததன் விளைவாக வெற்றியாளர் களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசுத் தொகையை நல்கினர். ஒவ்வொ ருவருக்கும் மூன்று மணித்துளிகள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் அனைத்து மாணாக்கர் களும் பெரியாரின் தொண்டு இனியும் தேவை என்ற கருத்தியல் அடிப் படையில் வைத்த சொல்லாடல்கள் எல் லாம் பார்வையாளர் களை வியக்க வைத்தன.
காலை பத்த ரைக்குத் தொடங்கி பிற்பகல் மூன் றரை வரை எந்தத் தொய் வும் இன்றி சலசலப்பும் இல்லாது கட்டிப் போட்டது என்றால் மிகையில்லை.
பேச்சாளர் நடுவே தமிழ் பிரபாகரன் மற்றும் வீரமணிராசும் பெரியாரைப் பற்றி சில நினைவு களைப் பகிர்ந்து கொண் டதும் வயிற்றுப்பசி தெரியாமல் எல் லோர்க்கும் செவிப்பசிக்கு விருந்து பரிமாறிய பின் வெற்றி பெற்றவர் களின் பெயர்களை மாவட்ட ப.க. செயலர் சுரேசு குமார் அறிவித் தார்.
முதல் பரிசு :
1. அ.சண்முகப் பிரியா (நான்காம் ஆண்டு, இளங்கலை வழக்கியல், மத்திய சட் டக்கல்லூரி, சேலம்)
2. சா.சப்ரின் பானு (இரண்டாம் ஆண்டு, இளங்கலை வணிகவியல், அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம் -8)
இரண்டாம் பரிசு :
1. ச.முகம்மது ரித் திக் (நான்காம் ஆண்டு, இளங்கலை வழக்கியல், மத்திய சட்டக்கல்லூரி, சேலம்)
2. க.ஆர்த்தி (மூன்றாம் ஆண்டு, இளங்கலை வரலாறு, அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சேலம் – 8)
மூன்றாம் பரிசு :
1. து. கீதா (முதலாம் ஆண்டு, முதுகலை நுண்ணுயிரியல், வைசியா கல்லூரி, சேலம்- 103)
2. கோ.கார்த்திகா (இரண் டாம் ஆண்டு, இளங்கலை நிறுமச் செயலியல், சவுடேசுவரி மகளிர் கல்லூரி, சேலம்)
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் அவர்களைப் பாராட்டிச் சான்றி தழும், முதல்வர் களின் திராவிடப் பிரகடனங்கள் புத்தகமும், புகழ்ச் செல்வி திங்களித ழும், வீரமணி ராசு, கா.நா.பாலு மற்றும் பரணிப் பாவலனும் சேர்ந்து வழங்கினர். நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இரா.புக ழேந்தி, மு.கவுதமன், கருணாமூர்த்தி, சோம சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வென்றவர்களுக்கு 2 முதல் பரிசுகளும் ரூ. 2500 என்ற அடிப்படையிலும், 2 இரண்டாம் பரிசுக ளும் ரூ. 1500 என்ற அடிப் படையிலும், 2 மூன்றாம் பரிசுகளும் ரூ.1000 என்ற அடிப்படை யிலும் பரிசு வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியாக சேலம் மாநகர துணைச் செயலாளர் கலாகுமார் நன்றியுரையுடன் மாலை நான்கரை மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
No comments:
Post a Comment