பெங்களூரு, ஜன.20 கரு நாடக முதல மைச்சர் சித்தராமையா ராகுல் காந்தியின் நடைப்பயணம் பாஜகவைக் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாகத் தெரிவித் துள்ளார்.
மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் உள்ள தவு பாலில் இருந்து கடந்த 14 ஆம் தேதி நடைப் பயணத்¬த் தொடங்கிய ராகுல் காந்தி, அடுத்ததாக நாகாலாந்து சென்றார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா இது குறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில்,
“ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்திற்கு மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் கிடைத்த அமோக வரவேற்பு பா.ஜ.க.வை கலக்கத்தில் ஆழ்த் தியுள்ளது. அதேபோன்ற வரவேற்பு அசாம் மாநிலத்திலும் கிடைக்கும் என்பதை அறிந்து, அம்மாநில அரசு ஜனநாயகத்திற்கு எதிரான வகையில் செயல்பட்டுள்ளது.
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, ராகுல் காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த அச்சத்தின் மூலம் அசாமில் நடைபெறும் ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதியாகியுள்ளது. ஆயினும் ராகுல் காந்தி தனது நிலைகுலையாத அர்ப்பணிப்புடன், நீதியை நிலை நாட்டுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து வருகிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.
Saturday, January 20, 2024
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் பாஜக கலக்கம்: கருநாடக முதலமைச்சர் சித்தராமையா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment