கடந்த 28-12-2023 அன்று ஓமலூரில் பெரியாரின் இறுதி முழக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதற்கு மாவட்ட செயலாளர், மற்றும், ராஜா, முத்து ஆகிய தோழர்களுடன் ஓமலூரில் உள்ள கடைகள் அனைத்திற்கும் பரிச்சயம் ஆன ஓர் உணவகத்தில் வேலை செய்யும் வெங்கட் ஆகியோர் கடை வசூல் செய்யப் புறப்பட்டோம்.எனக்கு சற்று முன் கோபம் உண்டு என்பதை அறிந்த திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் அவர்கள் என்னிடம் பெரியார் பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் எழுந்து பொதுவுடைமை பொதுவுடைமை என்று பேசுகிறீர்களே உங்கள் மனைவியை பொதுவுடைமை ஆக்குவீர்களா என்று கேட்டதற்கு பெரியார் சற்றும் கோபப்படாமல் அதை அவரிடம் அல்லவா நீங்கள் கேட்க வேண்டும் என்னிடம் கேட்பது எப்படி நியாயம் என்று கேட்டவுடன் கேள்வி கேட்டவர் வெட்கித் தலைகுனிந்தாராம்.
அதைப் போல நமது வசதியைப் பற்றி பேசினால் ஒரு முறை தந்தை பெரியார் பொதுக் கூட்டத்திற்கு பயணம் செய்த கார் டயர் பழுதானதற்கு மறைந்த பொருளாளர் பணம் கொடுத்ததற்கு பெரியார் அதை வாங்க மறுத்து அதற்கான பணத்தை பொதுக் கூட்டத்தில் துண்டு ஏந்தி வசூல் செய்யச் சொன் னாராம். நான்கு புதிய டயர்கள் வாங்க பணம் சேர்ந்த நிகழ்ச்சியை எல்லாம் சொல்லி நமது கூட்டம் சிறு தொகை வசூல் ஆனாலும் மக்கள் பங்களிப்போடு செய்வோம் என்று என்னை ஆசுவாசப்படுத்தி அறிவுரை கூறி வசூல் பணிக்கு ஊக்கம் அளித்தார்.
அறிவுரையை உள் வாங்கியதால் சில பேர் என்னை கோபப்படுத்தி தோற்றுப் போனார்கள் அவர்களிடம் கொடுத்த துண்டுப் பிரசுரத்தை திரும்பக் கேட்ட போது அவர்கள் வெட்கித் தலை குணிந்தனர். (துண்டுப் பிரசுரத்தை திரும்ப வாங்கிக் கொண்டோம்)
காலை 11 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை மக்கள் கொடுத்த உற்சாகத்தில் மதிய உணவு கூட சாப்பிடாமல் செய்த வசூல் பணம் 15,550/-
அதில் பெருந்தொகையாளர்கள் – 7,500
பெரும்மனம் படைத்தோர்- 8,050 மூலம் வசூல் ஆனது.
இனமானம் காக்க தன்மானத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் தத்துவம் எவ்வளவு மகத்துவமானது என்பதை ஓமலூரில் அன்று கடை வசூல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
ஓமலூரில் தந்தை பெரியாரின் இறுதி முழக்க பொதுக் கூட்டம் இனிதே நடந்தேறியது மகிழ்ச்சியை தந்தது.
வசூல் செய்தவர்களுக்கு பனிக் காலத்திற்கு பயன் அளிக்கும் வகையில் சால்வை அணிவித்து மகிழ்ந்தார்கள் காப்பாளர்கள் பழநி புள்ளையண்ணன் அவர்களும் சிந்தாமணியூர் சி. சுப்ரமணியன் அவர்களும்.
எனக்கு ஊரில் கிடைக்கும் மரியாதை அனைத் திற்கும் நான் திராவிடர் கழகத்தில் இருப்பதாலே என்ற நன்றி உணர்வோடு எப்போதும் கழகத்தின் பணி செய்வேன்.
– ஓமலூர் பெ.சவுந்திரராசன்,
பொதுக் குழு உறுப்பினர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment