வீரமாமுனிவருக்கு மணி மண்டபம், நாமக்கல் கவிஞருக்கு சிலை, கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

வீரமாமுனிவருக்கு மணி மண்டபம், நாமக்கல் கவிஞருக்கு சிலை, கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

featured image

 

சென்னை, ஜன. 24- வீரமாமுனிவர் மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் மார் பளவு சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி உருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (23.1.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இத்தாலியைச் சேர்ந்த கான்ஸ்டன் டைன் ஜோசப் பெஸ்கிஎன்ற இயற் பெயரை கொண்ட வீரமாமுனிவர், “தமிழ் அகராதியின் தந்தை” எனப் போற்றப்படுகிறார்.
அவர், தமிழ் மொழிக்கு வீரமா முனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன் பட்டி கிராமம், புனிதபரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடியில் வீரமாமுனிவரின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டம் அமைக்கப்பட் டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.1.2024) காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதேபோல், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றிடும் வகையில், அவருக்கு நாமக்கல் நகரில் அவரது நினைவு இல்லத்தில் மார்பளவு சிலை ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
மேலும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகுக்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன் றனாருக்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன் பட்டியில் மார்பளவு சிலை மற்றும் நினைவுத்தூணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கடந்த 1750-களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச் சமர் புரிந்தவர் அரசியார் வேலு நாச்சியார். அவரது வளரிப் படைக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தார்.
குயிலியின் தியாகத்தை போற்றிடும் வகையில், சிவகங்கை வட்டம், ராகினிப் பட்டியில் அமைந்துள்ள வேலு நாச்சியார் மணிமண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை நிறுவப்பட உள்ளது.
அதேபோல், வெள்ளையர்களின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து கி.பி.18ஆ-ம் நூற்றாண்டில் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்துக்கு, சிவகங்கை வட்டம், நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படுகிறது. அதேபோல், மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந் தவரும், சுதந்திரப் போராட்ட வீரரு மான வெண்ணிக் காலாடியின் நினை வைப் போற்றும் வகையில்தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் கிரா மத்தில் ரூ. 50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படுகிறது.
மேலும், சுதந்திரப் போராட்ட காலத் தில் அண்ணல் காந்தியடிகள், பொதுவு டைமை சிந்தனையாளர் தோழர் ஜீவாவை சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத் தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் நினைவாக அங்கு ரூ. 3 கோடி மதிப்பீட் டில் அமைக்கப்படவுள்ள அரங்கம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள்
கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமி நாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, செய்தித்துறை செயலர் ஆர்.செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் ப.அருள் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

No comments:

Post a Comment