‘சுயமரியாதை சுடரொளி' வெ.ஜெயராமன் அவர்களின் நினைவேந்தல் - வீரவணக்கநாள் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

‘சுயமரியாதை சுடரொளி' வெ.ஜெயராமன் அவர்களின் நினைவேந்தல் - வீரவணக்கநாள் கூட்டம்

featured image

தஞ்சை, ஜன. 29- தஞ்சாவூர் கீழராஜ வீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பில் மறைந்த சுயமரியாதை சுட ரொளி, பெரியார் பெருந்தொண் டர், கழக காப்பாளர் வெ.ஜெய ராமன் அவர்களின் நினைவேந்தல்-வீரவணக்க நாள் கூட்டம் 28.01.2024 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
பா.நரேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில ப.க. அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன், வடக்குத்து கழக தலைவர் த.பாஸ் கரன், ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தஞ்சை மாநக ராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி வெ.ஜெயராமன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரை ஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார், கழக காப்பாளர் மு.அய்யனார் தொடக்கவுரையாற் றினார். கழக பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை.புலிகேசி சுயமரி யாதை வாழ்வே சுக வாழ்வு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன் நன்றியுரையாற்றினார்.

பெரியார் சமூக காப்பணி இயக் குநர் தே.பொய்யாமொழி, மாநில இளைஞரணி துணை செயலா ளர்கள் இரா.வெற்றிக்குமார், முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மகளிரணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மணிகண்டன், தஞ்சை மாநகர செயலாளர் அ. டேவிட், துணை தலைவர் வன்னிப்பட்டு செ.தமிழ்செல்வன், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. துணை செயலாளர் ஜெ.பெரியார் கண்ணன், ஒன்றிய ப.க. செயலாளர் இரா.வீரக்குமார், கீழவாசல் பகுதி கழக செயலாளர் பரமசிவம். திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், திருவையாறு ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தலை கலையரசன், பல்கலை கழக மாணவர் கழக மாநில அமைப்பாளர் அறிவுச்சுடர், தங்க.வெற்றிவேந்தன், தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார்செல்வம், திருவை யாறு கோ. கவுதமன், துரை. அன்ன பூரணம் அம்மாள், கண்டியூர் பெரியார் அலி, இளைஞரணி தோழர் அன்பழகன், மாணவர் கழக தோழர்கள் நிலவன், பொ.தமிழிசை, சுயமரியாதை சுடரொளி வெ.ஜெயராமன் அவர்களின் உற வினர்களான அன்பழகன் – அமுதா, ரவிச்சந்திரன் – வாசுகி, வழக்குரை ஞர் செந்தில் – கயல்விழி, ம.புகழேந்தி – அகிலா மற்றும் கழக தோழர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment