29.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ நடப்பு வரவு செலவு திட்டத்தில், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும், தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மாண்டியா மாவட்டம் கெரகோடு கிராம பஞ்சாயத்தில் விதிகளை மீறி தேசியக் கொடிக்கான கம்பத்தில் அனுமன் கொடியை ஏற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தற்செயல் நிகழ்வு அல்ல; வகுப்புவாத கலவரத்தை உருவாக்க சதி என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.
♦ நாட்டில் அவரைப் போன்று இந்த இடம் இல்லையென்றால் இன்னொரு இடம் செல்லும் பலர் உள்ளனர் என நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு தாவியது குறித்து மல்லிகார்ஜூனா கார்கே கிண்டல்.
தி டெலிகிராப்:
♦ மராத்தா இட ஒதுக்கீடு குறித்த மகாராட்டிர அரசின் முடிவை ஏற்க வேண்டாம்; இது பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் (உரிமைகள்) மீதான அத்துமீறலாகும், மேலும் மகாராட்டிராவில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே பேச்சு.
♦ ஜாதிவாரி கணக்கெடுப்பு நீதிக்கான முதல் படி; தெலங்கானா முதலமைச்சருக்கு ராகுல் காந்தி வாழ்த்து.
♦ வெறுப்புக்கு எதிராக ஒன்றுபடுவது வங்காளத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு என சிலிகுரியில் நீதிப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேச்சு.
♦ எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில் பொதுப்பிரிவு இடங்களை நிரப்பலாம் என்ற யுஜிசி யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும், அப்படி எல்லாம் எதுவும் இல்லை என மோடி அரசின் கல்வி அமைச்சர் மறுப்பு. அறிவிப்பை திரும்பப் பெறுவதாக யுஜிசி தலைவர் எக்ஸ்-இல் பதிவு.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment