சென்னை, ஜன. 20- பதிப்புத் துறையில் தனி முத்திரை பதித்து வரும் பூம்புகார் பதிப்பகத்தின் நிறுவன ரும் பிரபல ‘ஈகிள் டைரி’ குழுமத்தின் நிறுவனரு மான எம்.ஜெ. பிரதாப் சிங் (வயது 93) அவர்கள் நேற்று முன்தினம் (18.1.2024) மறைவுற்றார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர்.
1954ஆம் ஆண்டு சென்னையில் ‘ஈகிள்’ அச்சகத்தைத் தொடங்கி புகழ் பெற்ற ஈகிள் நாள் குறிப்புகளை (டைரி) உருவாக்கி பரப்பியவர். இந்த ஈகிள் பிரஸ் நிறு வனம் அவசர காலங்க ளில் நமது சிறப்பு வெளி யீடுகளான பெரியார் களஞ்சியம், ‘குடிஅரசு’, பெரியார் நாட்குறிப்பு உள்ளிட்ட நூல்களை அச்சிட்டும் உயர்தர பைண்டிங் செய்துதந்தும் வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது. சிறுவயது முதலே நூல்கள் மீதான ஆர்வம் கொண்டவர்.
பூம்புகார் பதிப்பகத் தில் முதன்முதலாக முருக தனுஷ்கோடி எழுதிய ‘காமராஜர் ஒரு சரித்திரம்’ எனும் நூலை வெளியிட்டார்.
அறிஞர் அண்ணா மீது பற்றுக் கொண்டு, அண்ணாவின் 70 நூல் களை பூம்புகார் பதிப்ப கம் மூலம் வெளியிட்ட வர். மேனாள் முதலமைச் சர் கலைஞர் அவர்களின் 20-க்கும் மேற்பட்ட நூல் களை பூம்புகார் பதிப்ப கம் மூலம் வெளியிட்டவர்.
மறைந்த எம்.ஜெ. பிரதாப்சிங் இல்லத்திற்கு நேற்று (19.1.2024) திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்று அவ ரது படத்திற்கு மரியாதை செலுத்தி அவரது மகன் ராஜாசிங் மற்றும் குடும் பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் உடன் சென்றார்.
No comments:
Post a Comment