சென்னை, ஜன 13- பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள காதுகேளாத இளைஞர் விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்கும் மாற் றுத்திறனாளிகள் அய்ந்து பேருக்கு ரூ.25 லட்சம் நிதி யுதவி வழங்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளதாக உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
பன்னாட்டுப் போட்டி
திருவாரூர் மாவட்டத் தைச் சேர்ந்த தமிழ்செல் வன், சேலம் சுதர்சன், விழுப்புரம் சபசிறீ, தேனி பிரியங்கா, காஞ்சீபுரம் வர் ஷினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக் கில்,
“நாங்கள் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள். நாங்கள் தேசிய அளவில் நடத்த பல்வேறு தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசுகளை வென்றுள்ளோம். தற் போது, பிரேசில் நாட்டில் வருகிற 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை முதலா வது உலக காது கேளாத இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த பன்னாட்டுப் போட்டியில் எங்களை பங்கேற்க அனுமதி வழங்க மறுத்து கடந்த 5ஆம் தேதி இந்திய விளையாட்டு ஆணையம் உத்தரவிட்டுள் ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அனு மதிக்கும்படி ஒன்றிய அர சுக்கு உத்தரவிட வேண் டும் என்று கூறியிருந் தார்.
உதயநிதியிடம் மனு
இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது. இந்திய விளை யாட்டு ஆணையம் தரப் பில், மனுதாரர்கள் தங்க ளது சொந்த செலவில் பிரேசில் நாட்டில் நடை பெறும் போட்டியில் கலந்து கொள்வதாக இருந்தால், அதற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம் என்று கூறப்பட்டது.
அப்போது மனுதாரர் கள் தரப்பில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிதியுதவி கேட்டு மனு கொடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது
இதுகுறித்து தமிழ்நாடு அரசிடம் கேட்டு தெரி விக்கும்படி கூடுதல் அட்வ கேட் ஜெனரல் ஜெ.ரவீந் திரனுக்கு நீதிபதி உத்தர விட்டார்.
தலா ரூ.5 லட்சம்
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட் வகேட் ஜெனரல் ரவீந்தி ரன் ஆஜராகி, மனுதாரர் களுக்கு ஏற்கெனவே விளையாட்டு உபகரணங் களை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. தற்போது பிரேசில் நாட்டில் நடை பெறும் பன்னாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம், 5 பேருக்கு ரூ 25 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் பிரேசில் செல்ல அனைத்து ஏற் பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்” என்று உத் தரவாதம் அளித்தார். இதை பதிவுச் செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தர விட்டார்.
No comments:
Post a Comment