நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘திராவிட மாடல்’ அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் – கும்பகோணம் மண்டலம் பேருந்தில் இந்து கடவுளர் படங்களை ஒட்டி உள்ளது கண்டிக்கத் தக்கது. இதற்கு துணை போன சம்பந்தபட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து அரசு பேருந்துகளிலும் ஓட்டுநர் இருக்கை முன் இது போன்ற கடவுளர் படங்கள் வைக்கப்படுவதை யும் இனியும் அனுமதிக்கக் கூடாது.
தொப்பியா கிரிக்கெட் விளையாடுகிறது?
“காணாமல் போன கிரிக்கெட் வீரர் வார்னரின் ராசியான தொப்பி” என்று ஒரு செய்தி உலா வருகிறது. திறமையைக் காட்ட வேண்டிய விளையாட்டு வீரர்களுக்குக்கூட ஏன் இந்த மூடநம்பிக்கை? விளையாடுவது இவரா அல்லது தொப்பியா?
என்று மடியும் இந்த மூடநம்பிக்கை…?
No comments:
Post a Comment