ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் நடத்துவதென தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் நடத்துவதென தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

featured image

உரத்தநாடு, ஜன. 20- உரத்தநாடு ஒன்றிய திரவிடர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒன்றிய கலந்து ரையாடல் கூட்டம் 31.12.2023 அன்று மாலை 5 மணிக்கு உரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஒன்றிய தொழி லாளர் அணித் தலைவர் துரை. தன்மானம் வரவேற்று உரையாற்றி னார். கூட்டத்திற்கு திராவிடர் தொழிலாளர் கழக மாநில பேரவைத் தலைவர் சிவகுருநாதன் தலைமையேற்றார். ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர் மாநல். பரமசிவம், ஒன்றிய தொழிலாளர் அணிச் செயலாளர் ரெ.சசிக்குமார் ஆகி யோர் முன்னிலை ஏற்றனர்.
திராவிடர் தொழிலாளர் அணியின் செயல்பாடுகள் அதன் நோக்கங்களை விளக்கி திராவிடர் தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் மு.சேகர் கருத்து ரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில பெரியார் வீர விளையாட்டுக்கழக செயலா ளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலா ளர் க.மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணித் தலைவர் மா.மதியழகன்,தெற்கு பகுதி செய லாளர் க.சுடர்வேந்தன், நகர இளைஞரணி துணை செயலாளர் மாதவன், ஒக்கநாடு மேலையூர் கிளைக் கழக தலைவர் அ.ராசப்பா, மா.தென்னகம், வெ.சக்திவேல், க.மாணிக்கவாசகம், ஆ.ராசகாந்தி, ர.நிரஞ்சன்குமார், நெடுவை கிளைக் கழக செயலாளர் கு.லெனின் உள்ளிட்ட கழகத் தோழர் களும், அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் ஏராள மானோர் கூட்டத் தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
உரத்தநாடு அனைத்து பகுதி யிலும் திரா விடர் தொழிலாளர் அணி, தமிழ்நாடு பெரியார் கட்டு மானம் அமைப்புச்சாரா தொழிலா ளர் நலச்சங்கத்தின் அனைத்து தொழிலாளர்களையும் உறுப்பின ராக சேர்த்து தமிழ்நாடு தொழிலா ளர் நலவாரியத் தில் உறப்பினராக சேர்த்து அரசு வழங்கும் நலத்திட் டங்களையும், சலுகைகளையும் தொழிலாள்களுக்கு பெற்று தருவது எனவும்,
ஜனவரி மாதத்தில் சிறப்பு தொழிலாளர் முகாம் நடத்துவது எனவும் அனைத்து தொழிலாளர் களையும் உறுப்பினராக சேர்த்து நலவாரியத்தில் அட்டை பெற்று தருவது எனவும்,
உடல் உழைப்பு செய்யக்கூடிய அனைத்து தொழிலாளர்களையும் உறுப்பினராக இணைத்துக் கொள்வது எனவும்,
வருகின்ற செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு உரத்தநாடு பகுதியில் உள்ள தொழிலாளர்களை ஒருங்கி ணைத்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார் பாக இலவச கண்சிகிச்சை முகாம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

No comments:

Post a Comment