ஜெய்ப்பூர், ஜன. 31 பயிற்சி மய் யங்களுக்கு பெயர் பெற்ற இடமான கோட்டா நகரம் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் கோட்டாவில் சிறந்த பயிற்சி மய்யங்கள் இருப்பதாக கூறப்படுவதால், நாடு முழுவதிலும் இருந்து – குறிப்பாக வடமாநிலங்களி லிருந்து மாணவ – மாணவிகள் கோட்டா நகருக்கு தனியாக குடி பெயர்ந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோட்டாவில் நீட், ஜேஇஇ தேர்வுக்குப் பயிற்சி பெற்று வரும் மாணவ-மாணவிகள் தற் கொலை செய்து கொள்ளும் நிகழ்வு கள் அதிகரித்து வருகின்றன.
26 மாணவர்கள்
தற்கொலை
கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நடப்பாண் டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற் கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஜெய்த் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த ஒரே வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிகரிகா என்ற 19 வயது பெண் திங்களன்று தற்கொலை செய்து கொண்டார். நிகரிகா ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடி ஒளியும் ஓம் பிர்லா
மாணவர்களின் தற்கொலை புகலிடமாக உள்ள ராஜஸ்தானின் கோட்டா, மக்களவைத் தலைவரான பாஜகவின் ஓம் பிர்லாவின் சொந்தத் தொகுதியாகும். இத்தொகுதியில் தொட ர்ந்து 2 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள ஓம் பிர்லா கடந்த 4 ஆண்டுகளாக கோட்டாவில் நிகழும் மாணவர்கள் தற்கொலை விவகாரத்தைக் கண்டு கொள்வது கிடையாது. மாணவர்கள் மரணம் தொடர்பாக ஒருமுறைகூட நிகழ் விடத்திற்குச் சென்று ஆறுதல் கூறி யதும் கிடையாது.
தற்கொலை நிகழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை தொடர்பாக சாதாரண கருத்து கணைகளைகூட வீசியது கிடையாது. செய்தியாளர்கள் சந்திப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ‘‘மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்” என விளம்பர நிகழ்ச்சியில் பேசுவது போல பேசி விட்டுச் சென்றார், அவ்வளவுதான். அதன்பிறகு கோட்டா மாணவர்கள் மரணங்கள்பற்றி வாய்திறக்க வில்லை. கிட்டத்தட்ட தனது தொகுதியின் முக்கிய நிகழ்வாக உள்ள மாணவர்களின் தற்கொலை விவகாரத்தை கண்டு ஓடி ஒளிந்து வருகிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment