தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு:
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 23.12.2023 சனிக்கிழமை மாலை 5மணியளவில் தொடங்கி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தந்தைபெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமை யில், மாவட்ட செயலாளர். மு.விசயேந்திரன் வரவேற்புரை யோடு மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, நகர தலைவர்அக்ரி ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, அரங்கராசன், ரவிக்குமார் வேலாயுதம், பிச்சப்பிள்ளை ஆகியோர் முன்னிலையில் கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி தந்தைபெரியாரின் கொள்கைகளை விளக்கி யும், இறுதிப் பேருரையில் உள்ள செய்திகளை குறிப்பிட்டும் சிறப்புரைஆற்றினார்.
திமுகபொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், செயராமன், காமராசு ரத்தினவேல் சர்புதீன் காவிரிநாடன், அரங்கய்யா, சரவணன், தமிழினியன், சுகுமாரன்,இனியன், தொ.மு.ச.குமார், ஆசிரியர் அற்புதம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சின்ன சாமி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
பழனி
பழனி-பாலசமுத்திரம் பகுதியில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு அய்யா அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் 23-12-2023, சனிக் கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வில் கழக சொற்பொழி வாளர் முனைவர்,அதிரடி.க.அன்பழகன் பங்கேற்று சிறப்புரை யாற்றினார். மேலும் மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
கூட்டத் தொடக்கத்தில் பழனி அழகர்சாமி மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்வை நடத்தினார். இந்நிகழ்வில் சி.ராதாகிருட்டிணன், குண.அறிவழகன், க.நாகராசு, பழனி செந்தில், கருப்புச்சாமி, ச.பாலசுப்பிரமணி, திராவிடச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாதனூர்
டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் சோமலாரா புரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மு. வெற்றி கொண்டான் மாதனூர் ஒன்றிய தலைவர் தலைமை வகித்தார். ராஜ்குமார் (கிளைச் செயலா ளர்) வரவேற்புரையாற்றினார், எ. அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்), இரா. பன்னீர்செல்வம் (மாவட்ட துணை தலைவர்), சி. எ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரவி (ஆம்பூர் நகரத் தலைவர்), சே.வெங்க டேசன் (மாதனூர் ஒன்றிய செயலாளர்) ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கோ.திராவிட மணி (தலைமைக் கழக அமைப்பு செயலாளர்) தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், அண்ணா.சரவணன் சிறப்புரை ஆற்றினார் கள். பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) இணைப்புரை வழங்கினார். மு.பாரதி (மகளிர் பாசறை பொறுப்பாளர்) நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக வெங்கடாசலம் வழங்கிய மந்திரமா! தந்திரமா! நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர்கள்: சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்) ப.க.காளிதாஸ் (நகர தலைவர்), பெ.ரா.கனகராஜ் கந்திலி (ஒன்றிய தலைவர்), ரா.நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்), கே.ராஜேந்திரன் (சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர்), தா.பாண்டியன் (சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர்), த.சாந்தி (மாவட்ட தலைவர் மகளிரணி), அ.விஜயா (மாவட்ட அமைப்பாளர் மகளிரணி), அ.தமிழ்ச் செல்வன் (மாவட்ட செயலாளர் மாணவர் கழகம்), ர. கற்பக வள்ளி (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை), சி.சபரிதா (மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை), தி.நவநீதம் (மாவட்ட அமைப்பாளர், மகளிர் பாசறை), கோ.திருப்பதி (மாவட்ட தலைவர்), ப.ஆசிரியரணி (குமரவேல் மாவட்ட செயலாளர்), ப.ஆசிரியரணி, ஆர்.பன்னீர் (மாவட்ட செயலாளர் தொழி லாளரணி), கே.மோகன் (மாவட்ட அமைப்பாளர் தொழிலாள ரணி), சிவக்குமார் (நகர தலைவர் சோலையார்பேட்டை), யி.வி.றி.வள்ளுவன் (நகர அமைப்பாளர். சோலையார்பேட்டை), அன்புச்சேரன் (நகர தலைவர். வாணியம்பாடி), வே.அன்பு (மாவட்ட செயலாளர். ப. க.). எம்.என்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்), நா.சுப்புலட்சுமி (மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம்), எஸ்.சுரேஷ் குமார் (மாவட்ட தலைவர் இளைஞரணி), க.முருகன் (நகர அமைப்பாளர்), ரவி (ஆம்பூர் நகர தலைவர்), சாமி இளங்கோ (ஆம்பூர்), ராஜசேகர், (கிரி சமுத்திரம், கிளை தலைவர்) ஆகியோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment