14.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
• இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். அமைப்பாளராக நிதிஷ் பெயர் பரிந்துரைப்பு. ஆனால் நிதிஷ் அதனை ஏற்கவில்லை என தகவல்.
• ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை பயணம் இன்று (14.1.2024) இம்பால் அருகே தொடங்குகிறது. நூறு நாடாளு மன்ற தொகுதிகளுக்கூடாக இந்த பயணத்தில் ராகுல் செல்வார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• சோசலிச அரசியலின் நீண்ட வரலாற்றைக் கொண்ட பீகாரில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், சமூக நீதியின் அடிப்படையில், எதிர்க்கட்சியான இந்தியக் கூட்டணி ஆளும் பாஜகவை எதிர்கொள்ள முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• மணிப்பூரில் இருந்து ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, காங்கிரஸ் நேற்று (13.1.2024) இது ஒரு கருத்தியல் பயணம் என்றும் தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டது அல்ல என்றும், மோடி ஆட்சியின் 10 ஆண்டுகால அநியாயப் போக்குக்கு எதிராக இது நடத்தப்படுவதாகவும் விளக்கம்.
தி இந்து:
• மத நிகழ்வுகளில் அரசியல் தலையீடு விரும்பத்தகாதது; ஒருவரது பெயரைப் பிரச்சாரம் செய்வதற்காக “மத விதி களை மீறுவது” “கடவுளுக்கு எதிரான கிளர்ச்சி” என்கிறார் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி,
– குடந்தை கருணா
No comments:
Post a Comment