திக்கெட்டும் பெருமை சேர்க்கும் திராவிடத்தின் தமிழணங்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

திக்கெட்டும் பெருமை சேர்க்கும் திராவிடத்தின் தமிழணங்கு!

featured image

பாணன்

கடந்த ஆண்டு ‘பெரியார் பிஞ்சு’ இதழில் நியூசிலாந்து பழங்குடியினர் பற்றிய ஒரு கட்டுரை வந்தது, தங்கள் மூதாதையர் வந்த பாதையில் பயணம் செய்து யானையைக் கொண்டு வந்தது குறித்த நாடோடிக்கதை அது.
பாலினீசியா மற்றும் கிழக்கு எல்லையில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆஸ்திரேலிய கண்டம், நியூசிலாந்து, கிறிஸ்துமஸ் தீவுகள், சாலமன் தீவுகள், டாங்கோ உள்ளிட்ட பல தீவு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இரண்டு வகை மனித இனங்கள் உள்ளன. ஒன்று பாலினீசிய மங்கோல் இனக்குழு, மற்றொன்று தொல்குடி (இண்டிகோஸ்). இதில் மங்கோல் வகை கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்த மனித இனம். இந்த மனித இனம் தான் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தின் போது அமெரிக்க கண்டத்திற்குச் சென்ற இனம். அங்கிருந்து 7 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் போக்கில் சிறிய படகுகளில் சென்று, பாலினீசியத் தீவுகளை அடைந்தனர். அவர்கள் அங்கு சென்ற போது ஏற்கெனவே அந்த தீவுகளில் ஒரு இனம் வாழ்ந்து வந்தது, மங்கோல் இன மக்கள் கிழக்கு ஆசியாவில் இருந்து அமெரிக்கா சென்று, பாலினீசிய தீவுகளை அடைந்தனர் என்றால் ஏற்கெனவே இந்த தீவுகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தவர் என்ற கேள்வி எழும்!
குமரிக்கண்டம் என்பது, நில அடுக்குகளின் தோற்றங்களை வைத்து பார்க்கும் போது அப்படி ஒன்று இல்லை என்றுதான் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் நீரில் மூழ்கிய ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததை தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். சங்க இலக்கியங்களிலும் இது உறுதி செய்யப்படுகிறது.

தலைச்சங்கம் மற்றும் இடைச் சங்கம் காலத்தில் அங்கு தோன்றிய இலக்கியங்கள்படி இவை உறுதிப் படுத்தப்பட்டவைகள் ஆகும். தென் தமிழ்நாட்டின் பல அடையாளங்கள் தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, டான்சானியா, குமாரஸ் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், காகஸ் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் காணப்படுகிறது. பரந்த நிலப்பரப்பு இருந்ததையும், அந்த நிலப்பரப்பு 4000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆழிப்பேரலையில் மூழ்கிப் போனதையும் சங்க இலக்கியங்கள் மற்றும் அகழாய்வுகள் மூலம் அறிய வருகிறது.
2004ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியப் பெருங்கடல் சுனாமியைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் இந்தியப் பகுதியில் சுனாமி பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது CE 850-900, CE 660-880, CE 1100-1300, CE 1679, and CE 1762. காலகட்டத்தில் மிகப் பெரிய சுனாமிப் பேரலைகள் தென் இந்தியாவைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் சிணி 660-880 ணீஸீபீ சிணி 1100-1300 ஏற்பட்ட சுனாமி ஆனது 9.5 என்ற அளவில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய சுனாமி என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது தலைச்சங்கம் மற்றும் இடைச்சங்கம் அழியக் காரணமாக சங்க இலக்கியங்கள் கூறும் ஆழிப் பேரலை என்பது உண்மையானது என்று 13 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த ஆய்வுகளின் முடிவுகள் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த போது உறுதி செய்யப்பட்டது.
Of these, the CE 660-880 and CE 1100-1300 were unusual events (mega earthquakes 9.0 ≥ Mw ≤ 9.5)
https://www.nature.com/articles/s41598-019-54750-6 Article
Open access Published: 05 December 2019 Javed N. Malik, Frango C. Johnson, Afzal Khan, Santiswarup Sahoo, Roohi Irshad, Debajyoti Paul, Shreya Arora, Pankaj Kumar Baghel & Sundeep Chopra
Scientific Reports volume 9, Article number: 18463 (2019) Cite this article

2000ஆம் ஆண்டு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ‘த மில்லனியம்’ என்ற ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டது, அதில் தென் பகுதியில் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பு, அதில் வாழ்ந்த மக்கள், அவர்களின் இலக்கண இலக்கியம் வாழ்க்கை முறைகுறித்து ஆய்வாளர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழர்கள் கடலோடுதல் என்பது இன்றல்ல நேற்றல்ல, கடல்கொண்ட நிலப்பரப்பில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் இந்தியப் பெருங்கடல் முழுவதும் பயணித்த சான்றுகள் உள்ளன.
‘தீக்கதிர்’ நாளிதழில் கடந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வெளிவந்த செய்தியில் கடல் கொண்ட பெருநகரங்களுள் ஒன்றான பூம்புகார் குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியானது.

பாரதிதாசன் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொலை உணர்வுப் பிரிவு நடத்திய ஆராய்ச்சியில், தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகர் கடற்கரை யிலிருந்து சுமார் 30-40 கி.மீ. தொலை வில் பழைய துறைமுக நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நகரம் மிகப் பெரிய துறைமுகம், கலங்கரை விளக்கம், கப்பல்தளம் மற்றும் குடியிருப்புகளுடன் சுமார் 250 சதுர கி.மீட்டர் வரை இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்களின் செயற்கைக்கோள் பொது அடி அளவீடு விளக்கப் படம் (GEBCO) மற்றும் பல்ஒளிக் கோடுகள் எதிரொலி, ஆழமானி தரவுகள் (MBES) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், வங்காள விரிகுடா வின் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை யிலான கடலோரப் பகுதிகள் இங்கு காணப்பட்டன.

சென்னையிலுள்ள தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் மூலம் இந்த எம்பிஎஸ்இ தரவுகள் சேகரிக்கப்பட்டன. கடந்த கால, கடல் மட்ட அளவைக் கொண்டு நடத்தப் பட்ட இந்த ஆராய்ச்சியில், பூம்புகார் நகரம் 2500 ஆண்டுகள் பழைமையானது அல்ல என்றும், இது சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதும் தெரிய வருகிறது. உலகத்திலேயே மிகப் பழைமையான துறைமுக நகரங்களில் ஒன்றாக இது இருந்திருக்கலாம் என பூம்பு கார் ஆராய்ச்சித் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான எஸ்.எம்.ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் கொண்ட பூம்புகார் நகரம், கடலில் மூழ்கியதற்கான சான்றுகள் தமிழின் அய்ம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இருக்கின்றது. துறைமுக நகரம் காணாமல் போனது ஒரு புதிராகவே இருந்தது. அறி வியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவியுடன், பூம்புகார் நகரின் வர லாற்றை நவீன முறையில் மறுகட்ட மைப்பதற்காக 2019-இல் முதற்கட்ட நிதியாக ரூ.8.90 கோடி ஒதுக்கப்பட்டது.

கடல்களில் செயற்கைக்கோள் பொது அடி அளவீடு விளக்கப்படத்தின் (GEBCO) தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, கடலில் 40 கி.மீ. வரை உள்ள காவிரியின் மூன்று டெல்டாக்களை காட்டியது. பல்ஒளிக் கோடுகள் எதிரொலி ஆழமானி தரவுகள் (MBES) ஆராய்ச்சியில் முக்கிய கடலோர நிலங்களுடன், மணல் கரைகள், உப்பங்கழிகள், ஆறுகள், கடற்கரையோரங்கள், முகத்துவாரங்கள் மற்றும் பழைய கரைகோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும், அறிவியல்ரீதியாக வடிவமைக்கப்பட்ட, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய சுமார் 11 கி.மீ நீளமும் மற் றும் 2.5 கி.மீ அகலமும் கொண்ட பரந்த துறைமுகம் மற்றும் பல கால் வாய்கள் இருப்பதாக நாங்கள் அனு மானிக்கிறோம். இதற்கிடையில், வணி கத்திற்கு பயன்படுத்தப்பட்ட அகன்ற மேசைப்பகுதி ஒன்றும் இருந்திருக்கி றது.

கிழக்குப் பகுதி துறைமுகத்தில், படுக்கை வசதி கொண்ட கப்பல்களுக்காக சுமார் 70-80 தளங்கள் வடக்கு-தெற்கு திசையை நோக்கி 30 கி.மீ. வரை இருந்தன. வடக்குப் பகுதியில் 4 ச.கி.மீட்டரில் சுற்றுச் சுவருடன் பல குடியிருப்புகள் இருந்துள்ளன. துறை முகத்திலிருந்து 10 கி.மீ. தொலை விலான வடக்கு திசையில், சுழற்படி கட்டுகளைக் கொண்ட கலங்கரை விளக்கம் இருந்ததை நினைவுத் தூண் சின்னங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆழமான நதிகளின் வெட்டுப் பள்ளத்தாக்குகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பல்வேறு புவியியல் அம்சங்கள் நிறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. வெள்ளம், சுனாமி, கடல் மட்டம் உயர்வு மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பூம்புகார் நகரம் பாதிக்கப்பட்டிருக்க லாம். இத்தகைய சீற்றங்களால் அழிந்த துறைமுக நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் ஏழாவது மறு மேம்பாட்டு பணிகள் 2500 ஆண்டு களுக்கு முன்பு நடந்திருக்கலாம். பின்னர், 1020 ஆண்டுகளுக்கு முந்தைய கடல்மட்ட உயர்வு காரணமாக, மீண்டும் நீரில் மூழ்கியிருக்கலாம். ஆராய்ச்சியின் போது கடலுக்கடியில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் உண்மை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இது தொடர்பான திட்டம் ஓராண்டுக்குள் முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்விலும் இரண்டு முறை ஆழிப்பேரலை தாக்கியது உறுதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் மங்கோல் இன மக்கள் பாலினீசியத் தீவுகளுக்கு வருகை தந்த போது அங்கு வாழ்ந்தமக்கள் திராவிடர்கள் என்று உறுதியாகிறது.
அப்படி என்றால் ஆய்வாளர்கள் இந்த மக்களை எந்த இனக் குழுவிற்குள் வைக்கின்றனர். ஏன் இண்டிகோஸ் பழங்குடி என்று மட்டும் அழைக்கின்றனர்? என்ற கேள்விக்கு விடை மும்பையில் உள்ளது. பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கெல்லாம் திராவிடம் என்று உள்ளதோ அதை எல்லாம் அழிக்க முனைந்தார்கள்.

முக்கியமாக இந்தியாவில் மிகவும் பிரபலமான மும்பையில் உள்ள பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகம் சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றப் பட்டது. அந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் சிந்து வெளி மக்கள் குறித்தும், அங்கு கிடைத்த பொருட்களைக் காட்சிக்கு வைத்து அவை சிந்துச் சமவெளி திராவிட நாகரிகத்தினர் என்ற வார்த்தை அகற்றப்பட்டு அடையாளம் தெரியாத இனக்குழு (Unidentified civilization) என்று மாற்றினார்கள். இன்றும் அடையாளம் தெரியாத இனக்குழு என்று தான் உள்ளது.
அதாவது மிகவும் அறிவுத்திறன் வாய்ந்த மனித இனம் என்ற ஒன்று இருப்பதையே அழிக்கும் நடவடிக்கைதான். திராவிடம் என்ற அடையாளத்தை அழிப்பது. அடையாளமில்லாத இனக்குழுவிற்கு வரலாறு கிடையாது, அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தினாலும் அதனை உலகிற்கு கொண்டு வரமுடியாது. அப்படி ஆவணப்படுத்த இயலாத திராவிட இனமக்கள் தான் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் இந்துமாக்கடலிலும் மேற்கு பசிபிக் தீவுக்ளில் வாழும் மக்கள்.

இந்த மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க 200 ஆண்டுகளாக தேடித் தேடி வேட்டையாடியது மேற்குலகம்.
டாஸ்மோனிய பழங்குடியினத்தின் கடைசிப் பெண்மணியை கூண்டுக்குள் காட்சிப் பொருளாக 8 ஆண்டுகள் வைத்து வேடிக்கை காட்டினர். அந்தப் பெண் “நான் இறந்தால் எனது உடலை எனது இனவழக்கபடி இந்த மண்ணிலேயே புதைத்துவிடுங்கள்” என்று கெஞ்சினாள். ஆனால் ரத்தக் குறைப்பாடு காரணமாக மரணமடைந்த அப்பெண்ணின் உடலை கடலில் தூக்கிப்போட்டு மீன்களுக்கு இரையாக்கினார்கள். இந்தப்பாதகச் செயலுக்கு இங்கிலாந்து மகாராணி பல நூற்றாண்டிற்குப் பிறகு வருத்தம் தெரிவித்தார்.

டாஸ்மோனிய பழங்குடியினரைப் போன்றே நியூசிலாந்து வாழ் பழங்குடியினத்தையும் மேற்குலக செல்வந்தர்கள் பொழுது போக்காக விலங்குகளை வேட்டையாடுவது போல் வேட்டையாடினர். பழங்குடி இனப்பிரிவில் ஒன்று மாவோரி.
மாவோரிகள் தங்களது முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற் கொண்டதாக கூறுவர். முக்கியமாக இந்த மக்களின் நாடோடிப் பாடலில் யானைகள் வாழும் தனது மூதாதையர்கள் பூமிக்கு சகோதரிகள் சென்றனராம். அங்கு வாழ்ந்த அந்தச் சகோதரியின் உறவினர்கள் யானை ஒன்றைப் பரிசாக கொடுத்து அனுப்பினார்களாம். அந்தச் சகோதரியும் யனையோடு கடல் கடந்து தனது ஊர் திரும்பும் போது அந்த ஊர் மக்கள் தங்களை இத்தனை ஆண்டுகளாக காணவராமல் இருந்த ஊரில் இருந்து கொண்டுவந்த யானையும் நீங்களும் கல்லாகப் போய்விடுங்கள் என்று சாபமிட்டார்களாம் அவர்களும் கல்லாக மாறிவிட்டார்களாம் என்ற கதையும் உண்டு தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகளை பல்வேறு நாடுகளுக்கு கப்பல் மூலம் கொண்டு சென்றதான பல சான்றுகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல் இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும், தமிழுக்கும் பலவித தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார். வெண்கலத்தினால் ஆன தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மணி இத்தீவில் கிடைத் துள்ளது. அந்த மணி கடலில் பயணிக்கும் கப்பலில் பொருத்தப்பட்ட மணி ஆகும். இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்த தாக கூறும் மாவோரிகளுக்கும், தமிழ் மணி நியூசிலாந்தில் கிடைத்துள்ளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.
300 ஆண்டுகளுக்கு முன்பு அய்ரோப் பியர்கள் இந்த தீவை அடைந்த போது நியூசிலாந்தின் தீவுகளில் மாவோரிகள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர். பொழுதுபோக்காக அந்த மக்களை வேட்டையாடத் துவங்கினர். சுமார் 150 ஆண்டுகாலம் வேட்டையாடினர். 1850 களில் சில நூறு மாவோரிகள் மட்டுமே மிஞ்சினர். இறுதியில் அவர்களைப் பாதுகாக்க அந்த அரசாங்கம் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியது. 5 விழுக்காடு மட்டுமே இருந்த அம்மக்கள் நகரங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். அந்த பழங்குடியினத்தின் வழிவந்த பெண் தான் ஹானா.
21 வயது ஹானா – நியூசிலாந்து நாட்டில் 2023 ஆம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹவுரகி வைகாடோ என்ற மவுரி பழங்குடியினர் தொகுதியிலிருந்து ‘ஹானா ரவ்ஹிடி மைபி கிளார்க்’ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
170 ஆண்டுகளில் முதன்முறையாக அந்த நாட்டில் மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மாவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் ஒருவர். 21 வயதேயான இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய முதல் உரை உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்று வருகிறது.

“எனது இந்த முதல் உரையை எனது தாத்தா, பாட்டிகளுக்கு அர்ப் பணித்திருந்தேன். என்றாலும் இன்று இந்தப் பேச்சு எங்கள் சமூகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது” என்று தனது பேச்சினைத் தொடங்கிய ஹானா, “உனக்காக நான் மடிவேன்… ஆனாலும், உனக்காக நான் வாழவும் செய்வேன்!” என்று தனது பேச்சினூடே மாவோரி இனத்தின் போர்ப் பாடலைப் பாடி நாடாளுமன்றத்தை அதிர வைத்தார். நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கும், ஹாமில்டனுக்கும் இடையில் உள்ள சிறிய நகரமான ஹன்ட்லியைச் சேர்ந்தவர் ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க். 21 வயதேயான இந்த இளம் பெண்ணுக்கு அரசியல் ஒன்றும் புதிதில்லை. மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக அரசியலில் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு இவரது தாத்தா டைதிமு மைபி, ஹாமில்டன்களின் காலனியாதிக்க மரபு மற்றும் மவோரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்களுக்கு எதிராகப் போராடும் விதமாக ஹாமில்டன் நகரின் பெயருக்கு சொந்தக்காரரான கேப்டன் ஹாமில்டனின் சிலையை உடைத்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். 1996 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஹவுராகி வைகடோ தொகுதியில் வெற்றி பெற்று வந்தவருமான மூத்த அரசியல்வாதியான நனையா மஹுதவை ஹானா தோற்கடித்து முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார்.
ஹானா, அரசியல் மற்றும் சமூக போராட்டாங்களைத் தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கு மாவோரி நடனம் குறித்து கற்பித்து வருகிறார். மேலும், நியூசிலாந்தின் பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காக போராடியும் வருகிறார்.

No comments:

Post a Comment