கழகத்தின் களப் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 10, 2024

கழகத்தின் களப் பணிகள்

featured image

தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு:

அமைந்தகரை
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் 4.1.2024 அன்று மாலை 6:30 மணிக்கு, அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டம் முதல் சாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல் வன் தொடங்கி வைத்தும், இளைஞரணித் தலைவர் நா.பார்த்தி பன் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி செயலாளர் ச.அரவிந்தகுமார், மகளிரணி செயலாளர் த.மரகதமணி, தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன், மகளிர் பாசறை செயலாளர் மு.பவானி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், சாம்குமார், க.நித்யகுமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். அண்ணா நகர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ச.பரமசிவம், மாநில கழக இணைஞரணித் துணைச் செயலாளர் சோ.சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி மாநிலச் செயலாளர் பெ.செஞ்சுடர், வி.சி.க.வின் மாணவரணித் தோழர் தமிழினியன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சம்பூர்னானந்த் என்ற பார்ப்பனரின் சிலையைத் திறந்து வைத்த அன்றைய ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜெஜீவன்ராம் அதன் பின்பு ஜாதி வெறியர்களால் அவமதிக்கப்பட்டதையும், வருகின்ற 2024 – நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து மட்டுமே இராமன் கோவில் என்பதை வைத்து பா.ஜ.க. நடத்தி வருகின்ற நாடகத்தையும், “ஸநாதன தர்மத்துக்கு மாறாக பிரதமர் மோடி இராமன் சிலையைத் தொட்டு ‘பிரதிஷ்டை’ செய்வதை நான் அயோத்திக்கு வந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா?” என்று பூரி சங்கராச்சாரியார் பிரதமர் நரேந்திர மோடியை பிறவி ஆணவத்தின்படி இழிவுபடுத்தி உள்ளதையும், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு என மகளிருக்கு முன்னுரிமை தந்து ‘திராவிட மாடல் அரசு’ செய்து வருகின்ற சாதனைகள் பலவற்றைப் பற்றி யும், தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் திரா விடர் கழகத்தை வழிநடத்தி தமிழர்களின் மேம்பாட்டிற் காக செய்து வருகின்ற பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினார்.
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாளர்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார். அண்ணா நகர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ச.பரமசிவம், வட்ட தி.மு.க. செய லாளர் பி.சந்திரசேகர், துணை செயலாளர் வி.பழனி வேல்ராஜன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மா.மோகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர் ஏ.மோகன், பா.கர்ணா, வழக்குரைஞர் ச.உதய பிரகாஷ், ச.பார்த்தீசுவரன், வெள்ள நிவாரண தொண்ட றப் பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்த டேனியல் மற்றும் தோழர்களுக்கு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வழக்குரைஞர் திவாகரனுக்கு ச.பரமசிவம் பயனாடை அணிவித்தார்.
தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், துணைத் தலைவர் வை.கலையரசன், கொடுங் கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, தாம்பரம் நகர செயலாளர் ச.மோகன்ராஜ், அழகிரி நரேஷ், படப்பை செ.சந்திரசேகரன், ச.சுரேஷ், சேத்துப்பட்டு லட்சுமணன், கே.ஆர்.ஆர். மன்றம் ஏ.முனியன், வட்ட தி.மு.க. பொருளாளர் செ.குமரன், துணை செயலாளர் ஜெ.வி.முருகன், சர்தார் உள்ளிட்ட தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
பொன்னுவேல் பிள்ளைத் தோட்டம் பகுதியில் கழகக் கொடிகள் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தன. அனை வருக்கும் உணவு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப் பட்டு வழங் கப்பட்டது. ஆகாஷ் ஜோசானஸ் ரஸ்சல் நன்றி கூறினார்.

சலங்கைபாளையம் – கோபி

கோபி மாவட்டம், சலங்கைபளையத்தில் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – இறுதி முழக் கம் – உறுதியேற்பு தெருமுனைக் கூட்டம் 30.12.2023 அன்று மாலை பவானி ஒன்றிய கழக செயலாளர் அ.பாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பெ.மேட்டுப்பாளையம் கழகத் தோழர் அ.பொன்வேலன் வரவேற்புரையாற்றினார். மாநில கிராமப் புற பிரச்சாரத் திட்ட அமைப்பாளர், கழகப் பேச் சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை யாற்றினார். கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், துணைச் செயலாளர் அ.பாட்டுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் க.யோகாநந்தம், பகுத்தறிவு ஆசிரியர் அணி பா.மல்லிகா, மருத்துவர் பா.ம.தங்கமலர் மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். நிறை வாக, கழகத் தோழர் அ.அசோக்குமார் நன்றி கூறினார்.

சிதம்பரம்
சிதம்பரம் மாவட்டம், சேத்தியாதோப்பில், தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – இறுதி முழக்கப் பொதுக்கூட்டம், 5.1.2024 அன்று மாலை 6 மணிக்கு, நகரத் தலைவர் பா.இராசசேகரன் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார் தாசன் முன்னிலையில் நடைபெற்றது.
காட்டுமன்னார்குடி, ஒன்றியசெயலாளர் ப.முருகன், இளைஞரணி மாவட்ட செயலர் பஞ்சநாதன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எ.என்.குணசேகரன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் பேசினர்.
இறுதியாக உரையாற்றிய கழகப் பேச்சாளரும், மாவட்ட கழக இணைச் செயலாளருமான யாழ்.திலீபன், தன் உரையில், தந்தை பெரியாரின் உழைப்பு பற்றியும், பெரியார் தன் இறுதி உரையில், உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுப் போகிறேன் என்ற கவலை உள்ளது என்பது குறித்தும், இந்த நாட்டில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி வந்தால், விளையக்கூடிய கேடுகள் குறித் தும், தந்தை பெரியாரும் அம்பேத்கரும் இல்லையென்றால், நம் சமுதாயம் எத்தகைய இழிநிலை அடைந்திருக்கும் என்பதையும் விளக்கி நீண்டதொரு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் தெ.ஆறு முகம், அள்ளூர் செயபால், கவின் ஆகியோர் கலந்து கொண்டனர். அள்ளூர் செயபால் நன்றி கூறினார்.

கோபி
கோபியில் தந்தை பெரியார் அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரையோடு மிக சிறப்பாக நடைபெற்றது. கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில் கோபி மாவட்ட காப்பாளர் இரா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் மு.சென்னியப்பன், பொதுக்குழு உறுப்பினர் யோகாநந்தம், ப.க. பொறுப்பாளர் கருப்பண்ணசாமி, மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட காப்பாளர் பே.ராஜமாணிக்கம் மற்றும் தி.மு.க. நகரச் செயலாளர், நகர மன்றத் தலைவர் நாகராஜ், தி.மு.க. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கள்ளிப்பட்டி மணி மற்றும் ஏராளமான திராவிடர் கழக, தி.மு.க தோழர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர். திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் வெ.குமாரராஜா சிறப்புரை ஆற்றினார்.

தேனி
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளை நகரின் முக்கிய வீதிகளில் மக்கள் சந்திக்கும் இடம் மற்றும் மதுரை- கொடைக்கானல் – திண்டுக்கல் – திருச்சி- சென்னை செல்லும் முக்கிய சாலைகளில் அறி வுலக ஆசான் தந்தை பெரியார் படத்துடன் பதாகை வைக் கப்பட்டது.
மேலும், TNSTC பணிமனை முன்பும், தென்கரை, வடகரை, வீழவடகரை முக்கிய சாலைகளில் தந்தை பெரியார் கொள்கை கருத்துகளை எடுத்துக்கூறி, அதன் பின் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தேனி மாவட்ட செயலாளர் அ.மோகன் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ப.க. பொறுப்பாளர் கள் மருத்துவர் இளங்கோவன் (தலைவர்), சீ.கிருஷ்ண மூர்த்தி (செயலாளர்), முருகன் (பொருளாளர்), அறிவழகன் (எழுத்தர்) (துணை செயலா ளர்), துரைப்பாண்டி (ஒன்றிய செயலாளர்), ப.க. பொறுப் பாளர்கள் வெங்கடாசலம் (பெரிய குளம் நகர அவைத் தலைவர்), அப்பாஸ்கான் (தி.மு.க. மாவட்ட சிறுபான்மை தலைவர்), ராதா (தி.மு.க.), வெங்கடா சலம் (சி.பிஎம்.), நல்லகருப்பன்பட்டி சமத்துவபுரம் லெனின், தோழர் சுப்பையா, தர்மராஜ் (தி.மு.க.), முருகன், TNSTC, தி.மு.க. மற்றும் தந்தை பெரியார் சிந்தனையாளர்கள் திரளாக கலந்துகொண்டு, ப.க.வில் இணைய விருப்பம் தெரிவித்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேனி மாவட்ட அமைப்பாளர் கருப்பணன் (TNSTC பெரிய குளம் கிளை) ஒருங்கிணைத்தார். நிறைவாக தோழர் சுப்பையா (CPM) நன்றியுரை கூறி அனைவருக்கும் தேநீர் வழங்கினார்கள்.

எசனை
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 27. 12 .2023 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
எசனை தேரடித் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் சி. தங்கராசு தலைமையேற்க, சின்னசாமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன், பெரம்பலூர் நகரதலைவர் அக்ரி
ந.ஆறுமுகம் மாவட்ட ப. க தலைவர் பெ. நடராஜன், மாவட்ட அமைப்பாளர் பெ.துரைசாமி, வேப்பூர் ஒன்றிய அமைப் பாளர் அரங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் குமணன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வழக்குரைஞர் ப. காமராசு, வணிகர் அணி துணை அமைப் பாளர் காமராஜ், விசிக கிளை செயலாளர் இளவரசன் இளைஞர் முன்னணி பொன் தங்கராசன், இந்திய தொழிலா ளர் கட்சியினுடைய தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் கி. முகுந்தன், தலைமை கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன், கழகப் பேச்சாளர் புலவர் வை. நாத்திக நம்பி ஆகியோர் தந்தை பெரியாரின் தொண்டறத்தை விளக்கியும், இறுதிப் பேருரையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியும் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதி மொழிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினர்.
பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் செ. தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ. சர வணன், இளையராஜா ஆதித்தன், ஸ்டாலின், சுகுமாறன், பெரியார் பெருந்தொண்டர் ஆதிமூலம் திட்டக்குடி வெ.அறிவு உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் திரளான பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

வேதாரண்யம்
தந்தை பெரியார் அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் திராவிடர் கழக பரப்புரை கூட்டம் வேதாரண்யம் பெரியார் சிலை அருகில் கடந்த 30-12-2023 அன்று மாலை 5 மணி நடைபெற்றது.
கூட்டம் துவங்குவதற்கு முன்பாக அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு நகர் மன்ற தலைவர் மாமீ.புக ழேந்தி மாலை அணிவித்தார். கூட்டத் திற்கு கி.ராஜேந்திரன் தலைமையில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் புயல் சு.குமார், ஒன்றிய ப.க தலைவர் சி.முத்துசாமி, கி. சுர்ஜித் ஆகியோர் முன்னிலையில் கூட்டத்தை தொடங்கி வைத்து மாநில சட்ட கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், நகர் மன்ற தலைவர், தி.மு.க நகர செயலாளர் மா.மீ. புகழேந்தி, கழக காப் பாளர் கி.முருகையன், நாகை மாவட்ட தலைவர் நெப்பேலி யன் ஆகி யோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் உரை யாற்றினார்.
நிகழ்வில் தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, கோடியக்கரை கோ. ஜவகர், த. தமிழரசன், பி.சக்திவேல்,ப.திலீபன்,க.பாஸ்கர், நா.முகேஷ்,ப.இனியவன் மற்றும் கழகதோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் துவக்கத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் மு.அய்யப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் இறுதியாக இளைஞரணி தோழர் கமல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment