விஜயவாடா, ஜன. 20- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று (19.1.2024) திறந்து வைக்கப்பட்டது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த சிலையைத் திறந்துவைத்தார். இந்த சிலை சமூக நீதிக்கான சிலை என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா வின் அம்பேத்கர் ஸ்மிருதி வனத் தில் உள்ள 81 அடி பீடத்தில் நிறு வப்பட்டுள்ள 125 அடி உயர சிலை (மொத்த உயரம் 206 அடி) உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை என்றும், அம்பேத்கரின் தனித்து வத்தையும் அவருடைய சீர்திருத்த சிந்தனைகளையும் பிரதிபலிக்கிறது என்றும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.
நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில், குறிப் பாக பெண்களின் வரலாற்றில் அம்பேத்கர் செல்வாக்கு செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
இந்நிலையில் நேற்று நடை பெற்ற பிரமாண்ட விழாவில் சிலையை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்துவைத்தார். உலகில் உள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே இதுதான் மிகவும் உயரமான சிலை என்று பெயர் பெற்றுள்ளது.
அம்பேத்கரின் இந்த மாபெரும் சிலையானது ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சிலை 100 சத வீதம்இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. சிலைக்கான மூலப் பொருட்கள் பெறுவது முதல் வடி வமைப்பை இறுதி செய்வது வரை அனைத்தும் முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே நடைபெற்றுள் ளன என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
சிலையை நிறுவுவதற்கு நகரின் மய்யத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதா னத்தை ஆந்திர மாநில அரசு தேர்ந்தெடுத்தது. இந்த மைதானத் தில் காலை மற்றும் மாலையில் பொது மக்கள் நடைபயணம் மேற் கொள்வதற்கான வசதிகளும் உரு வாக்கப்பட்டுள்ளன.
சிலை அமைந்துள்ள பகுதி யில்உருவாக்கப்பட்டுள்ள அம் பேத்கர் அனுபவ மய்யத்தில் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறுஎல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2000 இருக் கைகள் கொண்ட மாநாட்டு மய்யம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையா டும் இடம் மற்றும் வாகன நிறுத்து மிடம் ஆகியவை இங்கு அமைந்து உள்ளன.
உலகின் இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை, அண்டை மாநிலமான தெலங்கா னாவில் இருப்பது குறிப்பிடத்தக் கது. உலகின் உயரமான 50 சிலை கள் பட்டியலிலும் இது இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment