புதுடில்லி, ஜன. 30- தெலங்கானாவில் தேர்த லுக்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி விரைவில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 27.1.2024 அன்று அறிவித்தார். இதனை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட டுள்ள பதிவில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு நீதிக்கான முதல் படியாகும். ஏனென் றால், எந்த ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆரோக்கியம் தெரியாமல் அதற்கான சரியான திட்டங்களை உருவாக்குவது சாத்திய மில்லை.
நாட்டின் செழுமையில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சமமான பங்க ளிப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. நீதிக்கான முதல் படியை எடுத் துள்ள முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கும், தெலங்கானா அரசுக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி கூடுகிறது
காவிரி மேலாண்மை ஆணையம்
புதுடில்லி, ஜன. 30- காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக் கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 27 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 28ஆவது கூட்டம் வருகிற 1ஆம் தேதி டில்லியில் நடக்கிறது. இந்த கூட்டம் 3 மாதங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்துக்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை.
காவிரியில் இருந்து கருநாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. இதையடுத்து, கடந்த 18ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment