பழங்குடி மக்களை காடுகளுக்கு உள்ளே அடைத்து அவர்களின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகளை தடுப்பதா? பா.ஜ.க.மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

பழங்குடி மக்களை காடுகளுக்கு உள்ளே அடைத்து அவர்களின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகளை தடுப்பதா? பா.ஜ.க.மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

featured image

மஜூலி,ஜன.21- மணிப்பூரில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய பயணம், நாகாலாந்து மாநிலத்தை கடந்து 18.1.2024 அன்று அசாமில் நுழைந்தது. அங்கு நேற்று 2-ஆவது நாளாக தனது பயணம் அவர் தொடர்ந்தார். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஆற்றுத்தீவு மாவட்டமான மஜூலியில் நடை பயணம் சென்ற அவருக்கு பொது மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களின் வர வேற்பை பெற்றவாறு அவர் உற்சாகமாக தொடர்ந்தார்.
இதற்கிடையே மஜூலியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். அப் போது பழங்குடியினரின் நலனில் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறி ஒன்றிய மாநில பா.ஜனதா அரசுகளை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:- உங்களை நாங்கள் ‘ஆதிவாசி’ என அழைக்கிறோம். முதல் குடிகள் என்பதே அதன் பொருள். முதல் குடிகளாக வளங்கள் மீதான ஆதிவாசிகளின் உரிமைகளை காங்கிரஸ் அங்கீகரிக்கிறது. ஆனால் பழங்குடியினரை வன வாசி என்று பா.ஜனதாவினர் அழைக்கிறார்கள். அதற்குப் பொருள், காடுகளில் வாழ்பவர்கள் என்பதாகும்.

இதன் மூலம் பழங்குடி மக் களை காடுகளுக்குள்ளேயே அடைத்து, அவர்களின் குழந் தைகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல் வதையும், ஆங்கிலம் கற்பதையும், வர்த்தகம் செய்யும் வாய்ப்புகளை யும் பறிக்க பா.ஜனதா முயற்சிக் கிறது.

உங்களுக்குரியதை உங்களுக்கு திருப்பி அளிக்க நாங்கள் விரும்பு கிறோம். உங்கள் குடிநீர், நிலம், காடு போன்றவை உங்களுக்குரிய தாக இருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதா அரசோ நாடு முழு வதும் பழங்குடியினரின் நிலங் களை பறித்து வருகிறது. உங் களுக்கு என்ன நடந்து கொண்டி ருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் நிலம் பறிக்கப் படுகிறது. உங்கள் வரலாறு அழிக் கப்படுகிறது. இது நாடு முழுவதும் நடக்கிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட இந்திய ஒற்றுமைப்பயணம் வெற்றி யடைந்தது. இதைப்போல கிழக்கு முதல் மேற்கு வரை மற்றொரு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத் தினர். எனவே நாங்கள் மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் தொடங்கி இருக்கிறோம். இது பா.ஜனதாவின் சித்தாந்தங்களுக்கு எதிரான ஒரு போராட்டம் ஆகும்.

மணிப்பூரை பா.ஜனதா எரித்து விட்டது. அங்கு மாதக்கணக்கில் சிவில் போர் போன்ற நிலைமை தான் நீடிக்கிறது. மக்கள் ஒருவரை யொருவர் கொன்று வருகின்றனர். ஆனால் பிரதமர் ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. நாகாலாந் தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரத மர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இங் குள்ள (அசாம்) முதலமைச்சர் மிகப்பெரிய ஊழல்வாதியாக இருக்கிறார். -இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

No comments:

Post a Comment