13.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரசின் ராமன் கோயில் விழா புறக்கணிப்பு நல்ல முடிவு.; பாஜகவின் அரசியல் போக்கை நம்பியிராமல், தனக்கான அரசியல் பாதையை காங்கிரஸ் வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
* அன்னபூர்ணி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டதை நிறுத்தியதன் மூலம், எந்த திரைப்படமும் கலையும் பிறரை புண்படுத்துகிறது என்று காரணம் காட்டி தடை செய்யும் போக்கு அதிகரிக்கிறது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*முழுவதும் கட்டி முடிக்கப்படாத ராமன் கோயில் விவகாரம்: பாஜகவின் ஹிந்துத்வா, ஹிந்து மதத்திற்கு எதிரானது என அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தாக்கு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மக்களின் உண்மையான பிரச்சினைகளை ராமன் கோயில் திறப்பு மறைக்க முடியாது. இந்த பிரச்சினைகளை முன்னிறுத்துவது எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும் என்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும்.பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
* தொகுதி பங்கீடு, அமைப்பாளர் பொறுப்பு குறித்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஜனவரி 13ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
* 16 அமைப்புகளின் கூட்டுத் தளமான அய்க்கிய மாணவர் கூட்டமைப்பின் சார்பில், டில்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை திரும்பப் பெறவும், நீட் தேர்வு, கியூட் (ழிணிறி, ழிணிணிஜி, சிஹிணிஜி) ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரின் உத்தரவின் பேரில் முஸ்லிம் பள்ளி மாணவனை சக மாணவர்கள் அறைந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள், குற்றம் நடந்த பிறகு அரசு எதிர்பார்த்ததைச் செய்யாததன் விளைவு என்று உச்ச நீதிமன்றம் யோகி அரசுக்கு கண்டனம்.
தி இந்து:
* பாஜகவை தோற்கடிப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க விவசாயிகள் மாநாடு. ஜனவரி 16ஆம் தேதி நடைபெறுகிறது. கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்று விவசாயம் மற்றும் தொழில் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
* உணர்ச்சிகரமான விடயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, உண்மையான பிரச்சினைகள் திசைதிருப்பப்படுகின்றன என சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவு.
தி டெலிகிராப்:
*”நம்பிக்கையாளர்கள் எப்போது கோவில், மசூதி அல்லது தேவாலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் அல்லது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை ஒரு அரசியல் கட்சி தீர்மானிக்க வேண்டுமா?” காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா கேள்வி.
* தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023, அரசமைப்புக்கு எதிரானது என தொடரப்பட்ட வழக்கில், சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம். தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன குழுவில் ஏன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சேர்க்கப்படவில்லை என விளக்கம் கேட்டு மோடி அரசுக்கு தாக்கீது அனுப்பியது.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment