பிரதமர் மேற்கொள்வது ஆன்மிக சுற்றுப் பயணமா? ஆதாயம் தேட அரசியல் சுற்றுப் பயணமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

பிரதமர் மேற்கொள்வது ஆன்மிக சுற்றுப் பயணமா? ஆதாயம் தேட அரசியல் சுற்றுப் பயணமா?

featured image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை, ஜன. 20- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அயோத்தியை ஆன்மிக சுற் றுலாத் தலமாக மாற்றுவதற்காக ரூ.11 ஆயிரம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத் திருக்கிறார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ தொலைவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக் கப்பட்டுள்ள நிலையில், மாற்று மசூதி கட்டுவதற்கான முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. முஸ்லிம் அமைப்புகள் தொடங்கிய அறக்கட்டளையில் ரூ.45 லட்சம்தான் நிதி சேர்க்கப் பட்டுள்ளது.
ஆனால், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.900 கோடி செல விடப்பட்டு, இன்னும் ரூ.3 ஆயிரம் கோடி டெபாசிட் இருக்கிறது.
சிறீரங்கம், ராமநாதபுரம் கோயில் களுக்கு மோடி செல்வது அரசியல் ஆதாயத்துக்குத்தான். தமிழ்நாடு மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து வரும் பிரதமரின் ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழ் நாடு மக்கள் சிக்க மாட்டார்கள். தமிழ்நாடு என்றைக்குமே பாஜக எதிர்ப்பு பூமியாகவே உள்ளது.
எனவே, ஆன்மிகப் பயணத்தின் மூலம் தமிழ்நாடு மக்களிடம் ஆதரவை திரட்டும் பிரதமர் மோடியின் முயற்சி வெற்றி பெறாது.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment