சென்னை, ஜன. 23- “ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத் தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரி கைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய் வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இதில் தலைநகரம் டில்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. இவர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், சென்னை மாம்பலம் கோயில் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், “ஆளுநர் அலறுவதற்குக் கார ணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சமூக நீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சி யுடன் நடந்தேறிய கட்சியின் இளை ஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தி யிருக்கிறது. மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளை ஞர் பட்டாளம், கட்சியின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் களத்துக்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே தி.மு.க. முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்ப தையும் மாநாட்டின் மய்யப் பொருளாக அமைந்த, ‘மாநில உரிமை மீட்பு முழக் கம்’ அமைந்திருந்தது. மதவெறி அரசிய லால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பாஜக அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்தி ருப்பதை மறைப்பதற்காக ஆன்மிகத் தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கட்சி யின் பொருளாளர் டி.ஆர்.பாலு ஏற் கெனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன் மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும் பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன, பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோ தியாக செயல்பட்டு வரும் பா.ஜ.க. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்த லில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டி ருக்கிறது தம்பி உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.
ராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை கள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட் டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.
ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி கள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பாஜகவில் உயர்ந்த பொறுப் பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டில்லி முதல் தமிழ் நாட்டில் உள்ள பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின்போது காணொலி காட்சி ஒளிபரப்புக்கு அற நிலையத்துறை தடை விதித்திருப்ப தாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொலி காட்சிகள் எதையும் திரையிடமாட் டோம் என்று குறிப்பிட்டுதான் அனு மதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.
அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர் நீதிமன் றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமை திப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமை திக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப் பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜை களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டுக்கு வழி வகுத்திடக் கூடாது என்றும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்து எச் சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பாஜகவால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார். காமா லைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ் நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, கோதண்டராமர் திருக் கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத் துக்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் கார ணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்?
தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப் பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமாளையும் வழிபாடு வார்கள்.
பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதி யையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக் கும் நோக்கில் பாஜகவில் பல நிலை களில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள்.
அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்ட னம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.
சேலத்தில் நடந்த கழக இளை ஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற அரசியல் எதிரி களும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரி களும் வதந்திகளைப் பரப்பி திசை திருப்ப நினைத்தாலும், திமுகவினர் ஒவ்வொரு வரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment