புதுடில்லி, ஜன.31 சிபிஅய், அமலாக்கத் துறை (இ.டி) உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என நேற்று(30.1.2024) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புகார் தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்ன தாக ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேற்று ஏற் பாடு செய்திருந்தது. இதில், பங் கேற்ற காங்கிரஸ் எம்.பி. பிர மோத் திவாரி செய்தியாளர்களி டம் கூறியதாவது:
எதிர்க்கட்சியினர் மீது சிபி அய், இ.டி போன்ற விசாரணை அமைப்புகள் வேண்டுமென்றே தவறாக பயன்படுத்தப்படுகின் றன. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளனர். அதேபோன்று, அசாமில் நடை பெற்ற காங்கிரஸ் நியாய நடைப் பயணத்தின் போதும் மாநில அரசு வன்முறையை கட்ட விழ்த்து விட்டது. நாட்டில் எழுதப்படாத சர்வாதிகாரம் நிலவி வருகிறது. இவ்வாறு பிரமோத் தெரிவித்தார்.
இடைக்கால நிதி நிலை அறிக்கைக்கு முந்தைய அனைத் துக் கட்சி கூட்டம் நாடாளு மன்ற நூலகக் கட்டடத்தில் நேற்று நடை பெற்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங் கேற்ற இந்த கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமை தாங்கினார். ஒவ் வொரு நாடாளுமன்றக் கூட் டத் தொடருக்கு முன்பும் இது போன்ற சந்திப்பு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த கூட்டத்தில், ஆளும் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகி யோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தரப் பில், காங்கிரஸைச் சேர்ந்த கே.சுரேஷ், திரிணமூல் காங் கிரஸின் சுதிப்பந்தோபாத்யாய, திமுகவின் டி.ஆர்.பாலு, சிவசே னாவின் ராகுல் ஷெவாலே, சமாஜ்வாதி கட்சியின் எஸ்டி ஹசன், ஜேடியூவின் ராம்நாத் தாக்குர், தெலுங்கு தேசம் கட்சி யின் கல்லா ஜெயதேவ் உள் ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. பிப்.1-ல் இடைக்கால நிதி நிலைய றிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் கிறார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
Wednesday, January 31, 2024
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா? ஆளும் பிஜேபிக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment