தமிழ்நாட்டில் ஆறு ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 24, 2024

தமிழ்நாட்டில் ஆறு ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்டம்

featured image

சென்னை, ஜன.24- தமிழ்நாட்டில் 6 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், 17 தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (22.1.2024) வழங்கினார்.
திட்ட ஒப்புதல்
தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறிய அளவி லான ஜவுளி பூங்கா திட்டத்தின்கீழ் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக் களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணை களையும், ஜவுளி தொழில் முனை வோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 17 தொழில் நிறுவனங் களுக்கு 10 சதவீத கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகையாக ரூ.9.25 கோடிக்கான காசோலை களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கைத்தறி, கைத் திறன், மற்றும் துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செய லாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் மா.வள் ளலார், கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1,200 பேருக்கு வேலைவாய்ப்பு
சிறிய அளவிலான ஜவுளி பூங் காக்கள் திட்டத்தின் கீழ் திரு வள்ளூர், தருமபுரி, கரூர், திருப்பூரில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக் களுக்கு திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத்தொகை ரூ.13.75 கோடியில், முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒப்பளிப்பு செய்து அதற் கான திட்ட ஒப்புதல் அரசாணை களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், மினி டெக்ஸ்டைல் பார்க் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர -ஜவுளி தொழில் முனை வோர்கள் பயன்பெறுவதோடு சுமார் 1,200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு பூங்காவில் ஆண்டுக்கு 24 லட்சம் மீட்டர் உற்பத்தி வீதம் பூங்காக்களில் 144 லட்சம் மீட்டர் அளவிற்கு துணி வகைகள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதன முதலீடு மானியம்
தமிழ்நாட்டின் கைத்தறி, விசைத் தறி, நூற்பு, பதனிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நவீன, ஒருங்கிணைந்த மற்றும் உல கத்தரம் வாய்ந்த ஜவுளித் துறையை உருவாக்கவும், உள்நாட்டு சந்தை மற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிக்காகவும் உற் பத்தி செலவைக் குறைத்து, உயர்தர ஜவுளி ஆடைகள் உற்பத்தி செய்ய வும், புதுமை, பன்முகத்தன்மை, மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து ஜவுளித்துறையை ஊக்குவிக்கவும் ஜவுளித் தொழில் முனைவோர் களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஜவுளித் தொழில் முனைவோர்கள் தங்க ளது நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டில் 10 சதவீதகூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜவுளித்தொழில் முனைவோர் களுக்கான முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 17 ஜவுளி நிறுவனங் களுக்கு 10 சதவீத கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகை ரூ.9.25 கோடி வழங்கிடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நிறுவ னங்களுக்கு மானியத்தொகை ரூ.5.33 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

No comments:

Post a Comment