பிணையில் வெளிவந்த பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் சந்திக்கலாமா? இரா.முத்தரசன் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

பிணையில் வெளிவந்த பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் சந்திக்கலாமா? இரா.முத்தரசன் அறிக்கை

featured image

சென்னை,ஜன.13- – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
சேலம் பெரியார் பல்கலைக் கழகத் தின் துணை வேந்தர் ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணை யில் வெளியே வந்துள்ளார்.
துணை வேந்தர் மற்றும் பேராசிரி யர்கள் மீதான குற்றச்செயல்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 11.01.2024 அன்று காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை மற் றும் கணினி அறிவியல் துறை பேராசிரி யர்கள் அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சூழலில் அரசமைப்பு அதிகாரப் பொறுப்பில் உள்ள ஆளுநர் “கலந்துரையாடல்” (?!) நிகழ்வுக்காக பல்கலைக் கழகம் வளாகம் சென்றதும், அங்கு குற்றக் கறை படிந்த துணை வேந்தர் உள்பட பேராசிரியர்களை அழைத்துப் பேசியதும் பல்வேறு கேள் விகளை எழுப்புகிறது.
விசாரணை நடந்து வரும் சூழலில் ஆளுநர் வருகை தருவது சரியல்ல என மாணவர், இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அலட்சியம் செய்து, அவர்களை கைது செய்து அப்புறப் படுத்தி விட்டு, ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையால் குற்றவாளிகள் தப் பித்து செல்ல, சாட்சியங்கள், ஆவணங் கள் இடம் மாற்றப்படுமோ என ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள் தேர்ந் தெடுத்து அமைத்துள்ள அரசுக்கு, ஆளுநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், உச்ச நீதி மன்றத்தில் செய்த முறையீட்டில், ஆளுநர், முதலமைச்சரை சந்தித்துப் பேசி சுமூக நிலைக்கு திருப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் அறிவித்த பல்கலைக் கழக துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் ரத்து செய்த, இரண்டொரு நாளில் சேலம் பெரியார் பல்கலைக் கழக நிகழ்வு மீண்டும் எதிர்மறையான திசை யில் செல்ல முயற்சிப்பதை வெளிப் படுத்துகிறது.
ஆளுநர் எனும் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் திரு.ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப் பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment