சென்ற 26.4.1936ஆம் தேதி மேல்புவனகிரி பிராமண ரல்லாத வாலிபர் சங்கம் திரு. செல்லப்பா தலைமையில் கூடி கீழ்க்கண்ட அநுதாபத் தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளது:-
திருநெல்வேலியில் சைவ வேளான குலத்தில் பிறந்து இளமையிலேயே தமிழ், ஆங்கிலங் கற்று, பிறவியில் வேற்றுமை கண்டு மனஞ்சகியாது, மக்கள் யாவரும் சமம் என்பதை உணர்ந்து, மக்கட்குத் தொண்டாற்றுவதே தமது முக்கிய கடனாகக் கொண்டு, பார்ப்பனரல்லாதார் முன் னேற்றங் கருதி சுமார் 20 வருட காலம் உழைத்தவரும், சிறிது காலம் ‘திராவிடன்’ ஆசிரியராயிருந்தவரும், பல பார்ப்பனரல்லாத மகாநாட்டிற்கு தலைமை வகித்து சுயமரி யாதை உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவரும், சமீபத்தில் அதாவது,
1935 டிசம்பர் 8ஆம் தேதி இச்சங்கத் திறப்பு விழாவாற்றி யவருமான தோழர் டி.வி. சுப்ரமணியம் அகால மரண மடைந்ததைக் கேட்டு இச்சங்கம் அளவிலாத் துன்பமடை கிறது. இவர் பிரிவானது பிராமணரல்லாதாருக்கு ஈடு செய்ய முடியாத ஓர் பெருந்துன்பமேயாகும். அவரது குடும்பத்தார்க்கு இச்சங்கத்தின் அநுதாபம் உரியதாக என காரியதரிசி எழுதுகிறார்.
– ‘விடுதலை’ – 6.5.1936
No comments:
Post a Comment