முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னை, ஜன. 26- சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைந்த கரையில் நேற்று (25.1.2024) நடை பெற்ற மொழிப்போர் தியாகி கள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத் தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி னார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று (25.1.2024) திருச் சியில் கலைஞருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள் ளார். மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் முன் நின்றனர். தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள். ஹிந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கலைஞர். உலகில் வேறெங்கும் மொழிக்காக இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது இல்லை. மொழிப் போராட்டத் திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது.
மொழியின் பழம்பெரு மையை பேசுவது மட்டுமே மொழிப்பற்று அல்ல. மொழியை கல்வியறிவின் வாயிலாக வளர்த் தோம், அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
தமிழை புறக்கணித்து ஹிந்தியை பாஜக திணிக்கிறது. இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே, பாஜக இந்தி மொழியை கையில் எடுத்துள்ளது.
கரோனாவை விட கொடிய வர்கள் பாஜக அரசு. பாஜகவின் தோல்வி பட்டியல் மிக நீளமானது.
பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நேற்று வரை ஆமாம் சாமி போட் டவர் எடப்பாடி பழனிசாமி.
நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சி, உண்மையான கூட்டாட்சி யாக அமையும்.
ராமன் கோவிலை காண்பித்து வடமாநில மக்களை திசை திருப்பி வருகிறது பாஜக. ஆனால், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள், மேயர் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்துகொண் டனர்.
No comments:
Post a Comment