ஆர்.என். ரவிக்கு அர்ப்பணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 18, 2024

ஆர்.என். ரவிக்கு அர்ப்பணம்

featured image

ஆர்.என். ரவிக்கு அர்ப்பணம்:
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, ஜன. 18- திருவள்ளுவரை யாரும் கறைப் படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தை இரண் டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் நாளும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 16.1.2024 அன்று மாநிலம் முழுவதும் மாட்டுப் பொங்கல் மற்றும் திரு வள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் நாளன்று வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையுடன் கூடிய வள்ளுவர் ஒளிப்படத்தை பகிர்ந்து “திருவள் ளுவர் நாளில், ஆன்மிக பூமி யான தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய ஸநாதன பாரம் பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள் ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டு மொத்த மனித குலத்துக்கு வழி காட்டியாகவும் உத்வேகத்தின் ஆதா ரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனை வருக்கும் எனது அன்பான நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
காவி உடையுடன் திருவள்ளு வரின் படத்தை பகிர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதிவு பெரும் சர்ச்சை யான நிலையில் அதற்கு கண்டனம் வலுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தாவது:
“தமிழினத்தில் பிறந்து அமிழ் தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட் பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம் பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை என்ற கருத்தி யலையும் வழிகாட்டியவர் திருவள்ளுவர். 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ் நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப் படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment