பொங்கல் - பெயர்க்காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

பொங்கல் - பெயர்க்காரணம்

featured image

பூமியிலே நாற்று வைத்து
கோடி நெல்லைக் கொய்வதுவாம்
சூரியனின் கீற்றுகள்
பச்சையமாய்த் தங்குவதாம்
சேறு மிதித்த உழவனுக்கு – தையில்
செல்வத்தை வழங்குவதாம்!

மாற்ற முடியாத் துன்பத்தை – திமில்
ஏ(வீ)று கொண்டு நீக்குவதாம்
பழைமையினை துறந்துவிட்டு – மனம்
பக்குவமாய் வளருவதாம்
இனிமையான வாழ்வதனை
இனிமேலே காணுவதாம்!

மக்கள் மனம் மகிழ்ச்சி பொங்க – பூமியில்
மழை நீராய் சேருவதாம்
இத்தனைதான் என்றில்லை
எல்லோரும் ஓரினம்தான் –
திராவிடம்தான் என்றே
பொங்குவது – ஆம்!
பொங்கலோ பொங்கல் – என்று
பொங்குவதாம்!

– கே.பாண்டுரங்கன்

No comments:

Post a Comment