திராவிட கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சியால், மயிலாப் பூரைச் சேர்ந்த ஓவியர் கே.வி.வேணு கோபால் அவர்கள் வரைந்தது தான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் திருவள்ளுவரின் படம்.
அதை அன்றைய தேதியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், எதிர் கட்சிகளான திமுக, கம்யூனிஸ்டுகள், பார்வர்டு பிளாக், சுதந்திரா கட்சி மற்றும் தமிழறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள, தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், கவிஞர் கண்ணதாசன், ம.பொ.சி, ப.ஜீவானந்தம், ஆதித்தனார் மற்றும் பலர் கலந்துக் கொண்டு, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வைத்து வெளியிட் டார்கள்!
அதற்கு அன்றைய முதலமைச்சர் காமராசரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் ஒன்றிய அர சின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் பெற்றார்.
காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத் சலம் ஆட்சிக் காலத்தில் 1960 இல் இந்திய அஞ்சல் துறையால் வள்ளு வரின் படம் கொண்ட அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
1967 இல் திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவரின் படத்தை வைக்க உத்தரவு பிறப்பித்தார் அறிஞர் அண்ணா.
1975 இல் சட்டமன்றத்தில் வள்ளு வரின் படத்தைத் திறந்தார் டாக்டர் கலைஞர். அத்தோடு நில்லாமல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவ ருக்கு ஒரு கோட்டம் அமைத்தார்.
அரசுப் பேருந்துகளில் திருக்குறள் கட்டாயமாக இடம்பெற்றது. கன்னியா குமரியில் திருவள்ளுவருக்கு கடலில் சிலை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
எம்ஜிஆர் ஆட்சியில் குமரியில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பள்ளிப் பாடப் புத்தகங் களில் குறள் அதிகாரங்கள் இடம் பெற்றன. திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு அரசாணை மூலம் நடை முறைக்கு வந்தது!
கலைஞர் மீண்டும் முதலமைச்சர் ஆனதும் 1996 இல் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு, ஜனவரி 1 இல் குமரியில் 133 அடி வானுயர சிலை வைக்கப்படுகிறது!
இப்படி அரசியல் சார்பற்று, கட்சி களுக்கு இடையே போட்டி பொறாமையற்ற, சமய சண்டைகள் அற்ற நீண்ட பெரும் வரலாறு திருவள்ளுவருக்கு இருக்கிறது.
இதையெல்லாம் படிக்காமல், தெரிந்துக் கொள்ளாமல் ஸநாதனப் பித்து முற்றிய சிலர், வள்ளுவருக்குக் காவி உடை தரித்து தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும், குறள் நெறிக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்!
– சிவக்குமார் (முகநூல் பதிவு)
No comments:
Post a Comment