கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.1.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்க மோடி அரசு முடிவு.
* தேர்வுக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு மீறிவிட்டதாக கூறி, மோடி அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு.
* புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட வகுப்பினருடன் விவாதிக்காமல், எதிர்க்கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல் என கண்டனம்.
தி டெலிகிராப்:
* இந்தியா கூட்டணியின் அமைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க வாய்ப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் பொதுவில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம். ஏற்கெனவே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்குரைஞர் பதில்.
* பிரதமரின் செல்பி பூத்களின் செலவினத்தை வெளியிட்ட ரயில்வே அதிகாரி தூக்கியடிப்பு.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment