பழனியில் பார்ப்பனர் சூழ்ச்சி பலிக்கவில்லை வரி கொடுப்போர் சங்கம் - மகாஜன சங்கம் ஆன விந்தை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 26, 2024

பழனியில் பார்ப்பனர் சூழ்ச்சி பலிக்கவில்லை வரி கொடுப்போர் சங்கம் - மகாஜன சங்கம் ஆன விந்தை!

பட்டதாரிகள் ஓடிய பரிதாபக் காட்சி!!

பழனி ஹைஸ்கூல் கடைசி சர்க்கார் உத்தரவின் படி நடந்துவது பலவிதத்திலும் இடைஞ்சல் என் பதையும், பல மாணவர்களும் உபாத்தியாயர்களும் வெளியே போவதைத் தடுக்கவும், பாடசாலையை எடுத்து விடுவதென்று நேர்மையாக முடிவு செய்த னர். ஆனால், பார்ப்பனர் பலருக்கு இது பொறுக்கக் கூடாத ஆத்திரத்தை உண்டாக்கிவிட்டபடியால், மேற்படி கவுன்சில் தீர்மானத்தைக் கண்டிப்பதற் கென்று வரி கொடுப்போர் சங்கம் என்ற ஓர் அநாமநேய சங்கத்தின் ஆதரவில் சென்ற 30.4.1936ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு இவ்வூர் நவரங்க மண்டபத்தில் ஓர் பொதுக்கூட்டம் கூடு மென்றும், சில பார்ப்பன வக்கீல்கள் பேசுவார்க ளென்றும் ஒரு துண்டுப் பிரசுரம் நகரெங்கும் வழங்கப்பட்டது. இதையறிந்த பல பார்ப்பன ரல்லாத தலைவர்களும், வாலிபர்களும் பார்ப்பன சூழ்ச்சியை பலிக்காது செய்ய முடிவு செய்து பொதுக் கூட்டத்தை அடைந்தனர்.

சுமார் 7லு மணிக்கு கூட்டம் ஆரம்பமாயிற்று நோட்டீசில் கண்டபடி தேவஸ்தான கவுரவ டிரஸ்டியும் வக்கீலுமான திரு. எஸ். முத்துசாமி முதலியார் அக்ராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முகவுரையாக சில வார்த்தைகள் பேசிய பின்னர், திரு. சுந்தரராஜய்யர் எம்.ஏ.பி.எல். பேசுவார் என்று முடிக்கும் போது கூட்டத்திலிருந்து ஒருவர் “வரி கொடுப்போர் சங்கம் என்பதொன்றிருக்கிறதா? அது எப்போது யாரால் ஸ்தாபிக்கப்பட்டது? அதன் ஆதரவில் இக்கூட்டம் கூட்டப்பட்டிருப் பதாக நோட்டீஸ் அறிவிக்கப்பட்டிருப்பது உண் மைதானா? என்பதை முதலில் பொதுஜனங்கள் அறிய ஆவலுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.’’ என்றார்.
திரு. சுந்தரராஜ அய்யர்:- வரி கொடுப்போர் சங்கம் என்று போடப்பட்டிருப்பது தவறு; இது மகாஜனக் கூட்டம் என்றார்.
கூட்டத்திலிருந்த ஒருவர்:- பொய்யாக இல்லாத ஒன்றை இருப்பதாக, கற்பனையாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது பொறுப்புள்ளவர்கள் செய்கையாகுமா? இதுமிகவும் கண்டிக்கத்தக்க தாகும். இத்தகைய பொய் விளம்பரம் செய்யக் காரணமாயிருந்தவர் யாரென்பதை நாங்கள் அறிய வேண்டும். அவர் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தலைவர் குறுக்கிட்டு: “நான் தலைமை வகிக்கும் போது நீங்கள் இங்கு விவகாரம் செய்து கொண்டிருப்பது முறையாகாது. நான் தலைமை வகிப்பது உங்களுக்குத் திருப்தியில்லையென்றால் தெரிவித்துவிடவேண்டும்.’’
ஒருவர்: இல்லை, தாங்களே இருக்கலாம். ஆனால், எங்கள் விருப்பத்தை தாங்களே நிறைவேற்றினாலும் சரியே. முதலில் தாங்கள் நோட்டீஸ் போட்டவர்கள் இன்னாரென்பதை அறிய வேண்டும். பின் அவர் மன்னிப்புக் கேட்ப தோடு ‘முனிசிபல் சபைத் தீர்மானத்தைக் கண்டிப் பது’ என்ற வாக்கியத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தலைவர் தன்னுடையை பார்ப்பன நண்பர் களிடம் கலந்தார். வக்கீல்களும், பட்டதாரிகளும் உள்ள அக்கூட்டத்தில் ஒருவராவது, நான்தான் செய்தேன் என்று தைரியமாகச் சொல்ல முன்வர வில்லை. குனிந்த தலை நிமிராமல் மணப் பெண் ணைப் போல எல்லோரும் பூமியையே உற்று நோக்கினர். (ஆகா’ இந்தச் சமயத்தில் என் கையில் ஒரு காமிரா இருந்தால், ஒன்றும் எழுதாமலேயே படம் பிடித்து அதை மட்டும் அனுப்பிவிடுவேன். துரதிர்ஷ்டவசமாக அச்சமயம் என்னிடம் அதுமட்டுமல்லை.)

தலைவர்: நான் எத்தனையோ கூட்டங்களில் தலைமை வகித்திருக்கிறேன். இன்று நடந்த மாதிரி என்றும் நடக்கவில்லை. நான் இந்த ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டதற்காக வருந்துகிறேன் என்று எழுந்து போகவே அவரது பார்ப்பன சகாக்களும் அவரைத் தொடர்ந்தனர். கூட்டம் அப்படியே இருந்தது.
மேற்படி கூட்டத்திற்கு கவுரவ மாஜிஸ்டிரேட்டும், பஞ்சாயத் கோர்ட் பிரசிடெண்டுமான ஜனாப் எஸ். காதர் முகமது ராவுத்தர் தலைமை வகிக்க, பொது ஜனங்களுக்கு ஸ்கூல் எடுக்கப் பட்டதின் உண்மையான காரணம் விளக்கப்பட்ட தோடு, கவுன்சில் தீர்மானத்தைப் பாராட்டியும், அடுத்து வருடத்தில் முனிசிபாலிட்டியார் ஒரு மிடில் ஸ்கூலாவது நடத்த வேண்டும் என்ற தீர்மானம் பலத்த கரகோஷத்தி னிடையே ஏகமன தாய் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் சந்தோஷ ஆர வாரத்திடையே கலைந்தது.
– ‘விடுதலை’ – 6.5.1936

No comments:

Post a Comment