இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
சென்னை, ஜன. 22- பேரிடர் காலங்களில் கடலில் சிக்கி தவிக் கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் மய்யம் பெங்களூருவில் திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடலில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளில் இருந்து அவசர செய்திகளை அனுப்புவ தற்காக ‘டிஸ் டரஸ் அவர்ட்டி ரான்ஸ் மீட்டர் (டிஏடி) என்ற உள்நாட்டு தொழில் நுட்பத் தீர்வை உருவாக்கியுள்ளது.
தகவல் தொடர்பு செயற் கைக்கோள் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டு மத்திய கட்டுப் பாட்டு நிலையத்தில் பெறப்படு கிறது. அங்கு மீன்பிடி படகின் அடையாளம் மற்றும் இருப் பிடத்திற்காக எச்சரிக்கை சமிக் ஞைகள் குறியிடப்படுகின்றன. பிரித்தெடுக் கப்பட்ட தகவல்கள் இந்திய கடலோர காவல்படை யின் கீழ் உள்ள கடல்சார் மீட்பு ஒருங் கிணைப்பு மய்யங்களுக்கு அனுப்பப் படுகிறது. இந்தத் தகவலைப் பயன்படுத்தி, ஒருங் கிணைந்து, ஆபத்தில் உள்ள மீனவர்களைக் காப்பாற்ற, தேடுதல் மற்றும் மீட்புப் பணி களை மேற்கொள்கிறது. டி.ஏ.டி. மய்யம் 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற் போது வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருவிகள் பயன்படுத் தப்படுகின்றன.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக் கோள் வழிசெலுத்தலில் தொழில் நுட்ப முன்னேற்றங்களைப் பயன் படுத்தி இஸ்ரோ மேம்பட்ட திறன்கள் மற்றும் 2ஆம் தலை முறை டி.ஏ.டி (டி.ஏ.டி.,எஸ்.ஜி.) பரிணமிக்கும் அம்சங்களுடன் டி.ஏ.டி. மேம்படுத் தப்பட்டுள் ளது. கடலில் இருந்து பேரிடர் எச்சரிக்கையை செயல் படுத்தும் மீனவர்களுக்கு மீண்டும் ஒப் புகை அனுப்பும் வசதி உள்ளது.
இது ஆபத்தில் உள்ள மீன வர்களை மீட்பதற்கு பெரிதும் உதவு கிறது. கடலில் இருந்து டிஸ்ட்ரஸ் சிக்னலை அனுப்பு வதைத் தவிர, கட்டுப்பாட்டு மய்யத்திலிருந்து செய்திகளைப் பெறும் திறனை கொண்டுள்ளது.
தாய்மொழியில்
படிக்கலாம்
இதைப் பயன்படுத்தி. மோச மான வானிலை. சுனாமி அல் லது வேறு ஏதேனும் அவசரகால நிகழ்வுகள் ஏற்படும்போதெல் லாம் கட லுக்குள் சிக்கியுள்ள மீனவர் களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும். இதனால் மீனவர்கள் தாயகம் திரும் பவோ அல்லது பாதுகாப்பான இடங் களுக்கு செல்லவோ முடியும். மத்திய கட்டுப்பாட்டு மய்யம் ‘சாகர் மித்ரா’ எனப்படும் வலை அடிப்படையிலான நெட் வொர்க் மேலாண்மை அமைப் பைக் கொண் டுள்ளது.
இது பதிவு செய்யப்பட்ட டி.ஏ.டி.-எஸ்.ஜி.யின் தரவுத் தளத்தை பராமரிக்கிறது. பாது காப்பு படையினருக்கு ஆபத்தில் இருக்கும் படகு பற்றிய தகவல் களை பெறவும், ஒருங்கிணைக் கவும் உதவுகிறது.
இது இந்தியக் கடலோரக் காவல்படைக்கு எந்த நேரமும் தாமதமின்றி, துயரத்தின் போது தேடல் மற்றும் மீட்புப் பணி களை மேற்கொள்ள உதவுகிறது. 24 மணி நேரமும் செயல்படும்
இதற்கான மய்யத்தை இந்திய கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜென ரல் சிறீராகேஷ் பால் முன்னிலையில் இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் பெங் களூரில் திறந்து வைத்தார்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
No comments:
Post a Comment