100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தகுதியற்றவர்களாக 11.36 கோடி பேர் நீக்கம்
பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடாவாம்!
சென்னை, ஜன. 2- கிராமப்புற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழு வதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த கிராம மக்கள், குளங்களை தூர்வாருதல், கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்திக் கொள் ளப்படுகின்றனர். இதன் மூலம், நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தின் பயனாளிகள் தங்களின் வேலைத் திட்ட அட்டை யுடன் ஆதார் எண் இணைக்க ஒன்றிய கிராமப் புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2022இல் உத்தரவிட்டது.
ஆதாரை இணைக்க கடந்த ஆண்டில் 5 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை முடிந்த நிலையில் இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, புத்தாண்டு நாளான நேற்று (1.1.2024)முதல் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் ஊதியம் பட்டுவாடா செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் ஒருநாளாவது வேலை செய்தவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக கணக்கில் கொள்ளப்படுவார்கள்.
முந்தைய நடைமுறையில், வேலை செய்யா தவர்கள் பெயரும் எழுதி, அதற்கான ஊதியம் பெறப்பட்டு முறைகேடும் பல நடந்ததாக ஒன்றிய அரசு குற்றம்சாட்டுகிறது. எனவே “போலிப் பணி யாளர்களை தடுக்க, ஆதார் மூலம் வேலைத் திட்ட அட்டை இணைக்கப்பட்டு, அதன் மூலம் வங்கிக் கணக்கு இணைப்பதன் மூலம் முறை கேடுகள் தவிர்க்கப்படும். அதோடு, பணியாளர் களுக்கு ஊதியமும் விரைவாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என கூறி உள்ளது. கடந்த 2022 ஏப்ரலில் ஆதார் இணைப்பு அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து முதற்கட்டமாக 7.6 கோடி பேர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
நடப்பு நிதியாண்டில் பதிவு செய்த தொழி லாளர்கள் 1.9 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், இத்திட்டத்தின் மொத்த பய னாளிகள் எண்ணிக்கை 25.69 கோடியாக இருந்த நிலையில் தற்போது 14.33 கோடி பயனாளிகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 11.36 கோடி பேர் தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான புத்தாண்டு பரிசு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (1.1.2024) தனது எக்ஸ் பதிவில், ‘‘கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இத்திட்டத்தில் மொத்த பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 34.8 சதவீதம் (8.9 கோடி) பேரும், செயல்பாட்டில் உள்ள 12.7 சதவீதம் (1.8 கோடி) பேரும் ஆதார் இணைப்பு மூலம் ஊதியப் பட்டுவாடா திட்டத்தில் தகுதியவற்றவர்களாகி உள்ளனர்.
கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களை, அடிப்படை வருமானம் ஈட்டு வதில் இருந்து விலக்கி வைத்து, கொடூரமான புத் தாண்டு பரிசை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்தின் மீதான பிரதமர் மோடி கொண்டிருக் கும் வெறுப்பால், தொழில்நுட்பங்கள் ஆயுதமாக் கப்படுவதை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.
No comments:
Post a Comment