சென்னை,ஜன.11- பத்தாவது உல கத் தமிழர் பொருளாதார மாநாட்டை நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் சென்னையில் 9.1.2024 அன்று தொடங்கி வைத்தார்.
சென்னை வளர்ச்சி கழகம் சார் பிலான 10ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னை யில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடக்க விழா கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியனில் 9.1.2024 அன்று நடைபெற்றது. இதற்கு சென்னை வளர்ச்சி கழகத் தின் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் தலைமையும், மாநாட்டின் வர வேற்பு குழுத் தலைவர் வி.ஜி.சந் தோஷம் முன்னிலையும் வகித் தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றி னார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த் துச் செய்தியை பேராசியர் எம்.முத்துவேலு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியின் வாழ்த்துக் கடிதத்தை முனைவர் ரவி குணவதி மைந்தன் ஆகியோர் படித்தனர்.
இந்த மாநாட்டில் முதல் நாளில் மொத்தம் 5 கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன. இதில் உலகம் முழுவதும் இருந்து வணி கத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், கல்வி யாளர்கள் பலர் கலந்து கொண் டனர்.
தற்போதைய உலக பொருளா தார நிலை மற்றும் வாய்ப்புகள்-சவால்கள், சிறு, குறுதொழில்களில் புதுமையான திட்டங்கள் மற்றும் புத்தாக்க தொழில்கள், சமூக மேம் பாடு, வணிக வளர்ச்சி, பொருளா தார வளர்ச்சிக்காக தொழில் முனைவோர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்ளுதல், உலகளா விய கூட்டுறவை ஏற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கள் இந்த அமர்வுகளில் நடத்தப் பட்டன.
முன்னதாக தொடக்க விழா வில் மொரிசியஸ் நாட்டு மேனாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையா புரி, மேனாள் ஒன்றிய அமைச்சர் வேங்கடபதி, புதுச்சேரி மேனாள் சட்டமன்ற தலைவர் வி.பி.சிவக் கொழுந்து, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், மேனாள் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், விஅய்டி வேந்தர் கோ.விசுவநாதன், தொழி லதிபர் பழனி பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடைசி நாளான நேற்று (ஜன.10) மாநாட்டில் மொத்தம் 7 அமர்வுகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 13 முக்கிய ஆளுமை களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
No comments:
Post a Comment