பெரியார் மருத்துவக் குழுமம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்திய முதியோர் நல விழிப்புணர்வு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (8.1.2024) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த உளவியல் மற்றும் முதியோர் நல மருத்துவரான சசிகுமார் குருநாதன் அரிய உரையாற்றினார்.
சென்னை, ஜன. 9- பெரியார் மருத்துவக் குழுமம், புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் நேற்று (8.1.2024) மாலை சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் முதியோர் நல விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுமை இலக்கிய தென்றல் புரவலர் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை யேற்று உரையாற்றினார்.
புதுமை இலக்கிய தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். பெரியார் மருத்துவக் குழும செயலாளர் மருத்துவர் மீனாம்பாள் அறிமுக உரை யாற்றினார்.
இராணுவத்தில் கேப்டனாகவும், மேற் படிப்புக்கு இங்கிலாந்து சென்று கல்வி பயின்றவரும், ஆஸ்திரேலியாவில் மனநல மருத்துவராகவும், முதியோர் நலனுக்கான மருத்துவராகவும் பணியாற்றி வருபவரு மாகிய உளவியல், முதியோர் நல மருத்து வர் சசிகுமார் குருநாதன் ‘முதியோர்நலன்’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முதுமையில் ஏற்படக்கூடிய பிரச்சி னைகள், நோய்கள் குறித்தும், அதனை தவிர்த்திடும் விதம்குறித்தும், முதியோர் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்குறித்தும் பட விளக்கங்களுடன் எளிமையான நடையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினார்.
பன்னாட்டு விருதுகளைப் பெற்ற மருத்துவர் சசிகுமார் குருநாதனை வர வேற்று, அவர்தம் பணிகளைப் பெரிதும் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடு வழங்கி சிறப்பு செய்தார்.
புதுமை இலக்கிய தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சி சுந்தரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடைக்கு பதில் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, பொரு ளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச் செயலாளர்கள் பொறியாளர் இன்பக்கனி, வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிசெல்வி, வழக்குரைஞர் பா.மணி யம்மை, தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால், பெரியார் மருத்துவக் குழுமம் பெரியார் செல்வி உள்பட ஏராள மானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
கூட்ட முடிவில் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
மருத்துவரின் பெற்றோர் த.குருநாதன்–இரா.ஜெயலட்சுமிஇணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.
No comments:
Post a Comment