டில்லி, டிச. 3- நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை முதன்மையானது. விருதுகள் மற்றும் மரியாதைகள் எல்லாம் அதற்குப் பின்னர் தான்.
இன்று பாகுபலியாக சொல்லப்பட்ட ஒருவரிடம் பெற்ற அரசியல் ஆதாயம், இந்த தைரியமான மகளின் கண்ணீரை விட பெரியதா? பிரதமர் இந்த தேசத்தின் காவலர். அவர் இதுபோன்ற கொடுமைகளில் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு மல்யுத்த வீராங்கனைகள் விருதினை திருப்பி ஒப்படைத்ததைப் பற்றி ராகுல்காந்தி சாடி யுள்ளார்.
வாக்களிக்கும் உரிமையும் பறிபோகுதே!
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்
லக்னோ, டிச. 3- 2024 மக்களவைத் தேர்தல் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் எதிர்க்கட்சி எம்பிக்களை பாஜக இடை நீக்கம் செய்துள்ளது.
2024இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து விடுவார்கள். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment