சென்னை, ஜன.9- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட தொழில் கண்காட்சியில் ஏராளமான நவீன கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்ததால் கண்காட்சி வெளி நாட்டினரை வெகுவாக கவர்ந்தது.
தொழில் கண்காட்சி
சென்னையில் 7.1.2023 அன்று தொடங்கிய உலக முதலீட் டாளர்கள் மாநாட்டையொட்டி மிக பிரமாண்டமான தொழில் கண்காட்சிக்கும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கண்காட்சியில் மின்சார வாகனங்கள், அதற்கான ‘சார்ஜிங் ஸ்டேஷன்’, செல்போன் உதிரி பாகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கார், வேளாண்மைக்கு பயன்படுத்தப் படும் டிரோன் உள்ளிட்ட ஏராளமான அதிநவீன கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் போன்ற வற்றை சுத்தம் செய்யும் எந்திரங்கள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பயன்ப டுத்தப்படும் அதிநவீன எந்திரங்கள், மலை களைக் குடைந்து சாலை அமைப்பதற்கு பயன் படுத்தப்படும் கருவிகள் என புதிய கண்டு பிடிப்புகள் அனைத்தும் கண்காட்சியில் இடம் பெற்றது.
வெளிநாட்டினர் பாராட்டு
தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தொடங் கப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனங்களும் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தன இந்த புத்தொழில் குறித்து வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் களுக்கு புத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் விளக்கிக் கூறினர்.
புதிய சிந்தனைகளுடன் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள புத்தொழிலுக்கு வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்தனர்.
நிரம்பி வழிந்த கூட்டம்
அதேபோன்று புத்தொழில் தொடங்குவது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், கல்லூரி மாண வர்களுக்கு புத்தொழில் நிறுவன அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். புத்தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவு, நிதி உதவி குறித்து கண்காட்சியில் விளக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் சிட்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 90 அரங்கு களும் இடம் பெற்றிருந்தன. அனைத்து ரக துப்பாக்கிகளும் கண்காட்சி யில் இடம்பெற்றன. இந்த அரங்கத்தில் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர். இந்த அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ‘உருவாக்கப்பட்ட பனியன், ஜாக்கெட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களும் கண்காட்சியில் விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டி னர்,தொழில் முனைவோர், கல்லூரி மாணவர்கள் என அத்தனை பேரையும் சுவரும் வகையில் இந்த தொழில் கண்காட்சி பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment