அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை
திண்டிவனம், ஜன. 22- தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா – திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பொங்கல் விழா பேருரையாற்றினார். “தமிழ ருக்கு விழா என்று ஒன்று இருந்தால் அது பொங்கல் விழா தான் என்று பெரியார் சொன்னார் என்றும், சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு அல்ல, அதில் வரும் சமஸ்கிருத பெயர்களின் பிரபவ துவங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகளின் பெயர்களும் தமிழ் பெயர்கள் அல்ல, சமஸ்கிருத பெயர்கள் என் றும், அந்த புராணப் பெயர்களின் புராணக் கதைகளின் புரட்டுகளையும் சொல்லி… தை ஒன்றே தமிழ் புத்தாண்டு எனவும் அதை சட்டம் ஆக்கி பெருமை தலைவர் கலைஞ ரையே சாரும்” என்றார்.
அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அனை வருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார். “தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்று பல முதலீட்டாளர்களை வர வைத்து பல தொழிற்சாலைகளை உருவாக்கி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கி வருகிறார். இந்த ஆட்சி தந்தை பெரியாருக்கான ஆட்சி – அவர் கொள் கையை நடைமுறைப்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சியின் கடமை என்றும் நெருக் கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படி வாழ்வதே வீரம் என்றும் மதத்தையும் மதவாதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் ஆர்எஸ்எஸ், பிஜேபி யின் கொட்டத்தை அடக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முறியடிப்போம். அதற்காக திராவிடர் கழகம் நடத்தும் பிரச்சாரங்களுக் கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற மேனாள் உறுப் பினர் இரா.சேதுநாதன்,திமுக நகர செயலாளர் எம்.கண்ணண், திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், தலைமை கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, மாவட்ட மகளிரணி தலைவர் விஜயலட்சுமி தாஸ், திண்டிவனம் பகுத்தறிவாளர் கழக செயலா ளர் நவா.ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு, பழங்குடி இருளர் முன்னணி தலைவர் சுடரொளி ந.சுந்தரம், செயலாளர் சுடரொளி தென்னரசு,மு.நகர துணை செயலா ளர் வி.எஸ். அசோக்குமார், தாழ்த்தப்பட்டோர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் துறைமுகம் ஆர்.கோபால், 12ஆவது வார்டு திமுக கிளை செயலாளர் வி.எஸ்.முருகன், 10வார்டு திமுக கிளைகழக செயலாளர் கோவிந்தன், கழக நகர தலைவர் உ.பச்சை யப்பன், ஒலக்கூர் ஒன்றிய தலைவர் ஏ.பெருமாள், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் க.பாலசுந்தரம்,மயிலம் ஒன்றிய தலைவர் கணபதிப்பட்டு இரா. பாவேந்தன், மயிலம் ஒன்றிய செயலாளர் தழுதாளி அன்புக்கரசன், வானூர் ஒன்றிய தலைவர் தி.க.அன்பரசு, வானூர் ஒன்றிய செயலாளர் சிவகவுரி சிறீதர், நகர இளைஞரணி தலைவர் ஓவியர் செந்தில், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கே. பாபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மு. இரமேஷ், மாணவர் கழகத் தோழர் பிரகாஷ், பெ.கார்த்தி, பெரியார் பற்றாளர் தோழர் கஜேந்திரன், மகளிரணி தோழியர் பா. இலட் சுமி, இ. நிவேதா,த.தேன்மொழி,சித்ரா, தேன் மொழி சிறீதர் ஆகியோர் கலந்து கொண்ட னர். மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பிபிரபாகரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment