ஒசூர், ஜன. 24- ஒசூர் ஒன்றிய கழக மேனாள் தலைவர் மு.லட்சுமிகாந்தன் (வயது69) உடல் நலம் குன்றிய நிலை யில் கடந்த 12 நாட்களாக ஒசூர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று(23.01.2024) அவர் மூளைசாவடைந்த நிலையில் அவரது அன்பு பிள்ளைகள் ஒப்புதலுடன் அவரது உடலு றுப்பு கொடை அளிக்கப்படு கிறது.
இன்று பகல் ஒரு மணிக்கு அன்னாரது உடல் அவரது இல்லமான ஒசூர் ஏ.எஸ்.டி.சி. அட்கோ பின்புறம் (வாட்டர் டாங்க் அருகில்) வைஷ்ணவி நகரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு அவரது சொந்த ஊரான ஆரணிக்கு எடுத்து சென்று நாளை (25.1.2024) இறுதி நிகழ்வு நடைபெறு கிறது. அவரது உடலுக்கு கழ கப்பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, இரங்கல் தெரிவித்து அவர்தம் குடும் பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment