கோவை, ஜன.29 கோவையில் புதிதாக சிறப்பு தீவிர வாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு காவல்துறை காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஒரு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் 3 காவல் ஆய்வாளர் உள்பட 40 காவலர்கள் பணிபுரிய உள்ளனர். இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஅய்டி சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இயங்கி வருகிறது. கோவையை தலைமையிடமாக கொண்டு திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் என மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் இங்கே விசாரிக்கப்படும். மேலும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (உபா), ஆயுத தடை சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப் படவுள்ளது.
இந்த தீவிரவாத தடுப்பு பிரிவானது விரைவில், 90 காவலர்களுடன் விரிவாக்கப்படும். இந்த பிரிவுக்கு விரை வில் தனி கட்டடம் கட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்பட்டு கட்டடம் கட்டப்படும். இந்த தீவிரவாத தடுப்பு பிரிவில் அனைத்து வகையான ஆயுதங்களை கையாள தெரிந்த தாக்குதல் குழு, உளவு தகவல்களை சேகரிக்கும் குழு உள்ளிட்ட குழுக்கள் இடம்பெற்றிருக்கும். உளவுப் பிரிவினர் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப் புகளின் ஆதரவாளர்களின் விபரங்களை கொண்ட தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலத்தில் உள்ள உளவு பிரிவினருடன் இந்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும் என தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment