தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா -நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா -நூல் வெளியீடு

featured image

தாம்பரம், ஜன. 8- 2.12.2023 சனிக் கிழமை அன்று மாலை 5 மணியள வில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கொட்டும் மழை யாக இருந்த போதிலும் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ப.முத் தையன் தலைமையில்,மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் முன் னிலையில், தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ் வரவேற்பு ரையுடன் தொடங்கியது.

கூட்ட தொடக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் சூழ பிறந்தநாள் “கேக்”க்கை தி.மு.கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் வெட்டி கலந்து கொண்டோர் அனைவரின் கை தட்டலுடன் கொண்டாடி அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
வாழ்வியல் சிந்தனைகள் 17 ஆவது தொகுதி, விடுதலை ஆசிரிய ராக 60 ஆண்டுகள் மற்றும் 91ஆம் ஆண்டில் ஆசிரியர் என்னும் ஆசிரியர் அவர்களின் மகளிர் சிறப்பு மலர் ஆகிய நூல்கள் (புத்த கங்கள்) வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு,
அதை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூக் (தாம்பரம் மாமன்ற உறுப்பினர்)திராவிடர் கழகம் தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் அவர்களால் இஸ்லாமிய சிறுபான்மையினர் இந்திய மண்ணில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிக பாதுகாப்புடன் மத நல்லிணக்கம் தழைக்கும் விதமாக அனைத்து மதத்தினரும் மதிக்கும் வகையில் வாழ்ந்து வருகிறார்கள். திராவிடர் கழகம் அதன் தலைவர் ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஆசிரியர் என்றென்றும் சிறப்புடன் வாழ்ந்து இந்த சமூகத்திற்கு பாடுபட வேண்டும் என்று ஆசிரியர் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என்று உரையாற்றினார்கள்.

தொடர்ந்து தி.மு.கழக செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் தொடக்கத்தில் பெரியார் வாசகர் வட்ட தலைவர் பதவி ஏற்றது எந்தனையோ விருதுகளுக்கெல் லாம் சிறந்த விருது அதற்காக தங்களுக்கு நன்றி கூறி ஆசிரியர் மிக எளிமையாக பழகுவதற்கு இனிமையாக அனைத்து தரப்பி னரும் மதிக்கும் ஒரு மகத்தான தலைவர் தந்தை பெரியார் அவர் களால் சரியான நேரத்தில் சரியான காலகட்டத்தில் மக்களுக்கு அறி முகம் செய்யப்பட்டு இன்றளவும் மக்களுக்காவே உழைக்கும் ஒரு உன்னதமான தலைவர் ஆசிரியர் அவர்கள்.
ஆசிரியர் என் தந்தை முனுஆதி அவர்களிடம் மாறா அன்புடன் பழகிய பண்பாளர் அதே நிலையை என்னிடமும் அந்த பரிவை காட் டுவது எனக்கு ஒரு வியப்பாகவே இருக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஆசிரியர் நீண்ட காலம் இந்த திரா விட தமிழ் சமூகத்திற்கு பாடுபட வேண்டும் என்று அவர் பிறந்த நாளில் அவர்களை வாழ்த்தி மகிழ் கிறேன் என்று வாழ்த்தினார்.

தொடர்ந்து மறுமலர்ச்சி திரா விட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன் உரையில், ஆசிரியர் பிறந்தநாள் என்பது திராவிட மக்களின் பிறந்தநாள் ஆசிரியர் அவர்களின் பெரியார் பணி 10 வயதில் தொடங்கி இந்த 91 வயது வரை எந்த சலனத்திற்கும் ஆட்படாமல் பெரியார் போட்டு தந்த பாதையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பது என்பது மக்கள் மத்தியில் நன்மதிப்பை சம்பாதித்து தொடர்ந்து மக்கள் பணியில் பாடுபடுகிறார் அவர் பிறந்தநாள் தமிழ்நாட்டின் பொன் னாள் அப்படிபட்ட மகத்தான தலைவர் நீண்ட காலம் இந்த சமு கத்திற்கு பாடுபட வாழ்த்துகிறேன் என்று தங்களுடை உரையை முடித்தார்கள்.
தொடர்ந்து கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற் றுகையில்,
ஆசிரியர் ஒரு தலை சிறந்த பண் பாளர் அரசியல் திறனாய்வாளர், பின்னாளில் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கருத்தில் கொண்டு மக்கள் பணியாற்றும் சிறந்த தலை வர் தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் ஒரு தொண்டனை போல் செயல் பட்டு இன்றைக்கும் மக்கள் நன் மதிப்பை பெற்ற தலைவர் ஆசிரியர் அவர்கள்.

பிறந்தநாளில் கலந்துக் கொண்டு அவர் சிறப்புகளை எடுத் துரைப்பது என்பது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.
ஆசிரியர் முன் மக்கள் பணி ஏராளமாக உள்ளது அத்தனை பணிகளையும் செய்து முடிப்பார் மக்கள் என்றும் நிலைத்து நிற்பார் கள் அப்படிப்பட்ட தலைவருடன் பணி புரிவதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.
அப்படிப்பட்ட தலைவர் நீண்ட காலம் மக்கள் பணியில் செயலாற்ற அவர் பிறந்தநாளில் உறுதியேற்று அவர் வழியில் நடை போடுவதே அவருக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு இவ்வாறு பேசி முடித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் தில் அனைத்து மட்ட பொறுப்பா ளர்களும் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.
நிகழ்ச்சி மிக நேர்த்தியாக அமைந்தது.

No comments:

Post a Comment