கிரேட் காண்டோ நிலநடுக்கம், அறியப்பட்ட படி இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரத்தின் பெரும் பகுதிகள் அழிந்தன. அய்ரோப்பிய பாணியில் வடிவமைக்கப்பட்ட தற்கால செங்கல் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன.
இதன் பின்விளைவாக ஜப்பானில் நில நடுக்கத்தை எதிர்கொள்ளும் முதல் கட்டுமான குறியீடு உருவாக்கப்பட்டது. அதிலிருந்து புதிய கட்டடங்கள் இரும்பு மற்றும் கான்கிரீட்டால் வலுப்படுத்தப்பட வேண்டும். மரக் கட்டடங்கள் தடிமனான விட்டங்களைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிடத்தக்க நிலநடுக்கம் நாட்டை தாக்கும் போது, சேதம் மதிப் பிடப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் வைக்கப் படுகின்றன. மிகப்பெரிய மாற்றம் 1981ஆம் ஆண்டு நடந்தது, மேலும் அனைத்து புதிய கட்டுமானங்களும் நில அதிர்வு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும், 1995 கோபி (ஜப்பான்) பூகம்பத்தின் போது அதிக பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டன.
2011ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்ட போது, டோக்கியோவில் 5ஆவது நிலநடுக்கம் ஏற்பட்டது. 1923இல் ஜப்பான் தலைநகர் சந்தித்த அதிர்வுக்கு சமம்.
1923இல் நகரமே தரைமட்டமான போது, 1,40,000 மக்கள் இறந்தனர். 2011 இல் பெரிய வானளாவிய கட்டடங்கள் அசைந்தன மற்றும் ஜன்னல்கள் உடைந்தன, ஆனால் பெரிய கட்டடங்கள் எதுவும் இடிந்து விழவில்லை. பல ஆயிரம் பேரைக் கொன்றது சுனாமிதானே தவிர, நிலநடுக்கம் அல்ல.
நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளான பழைய மர வீடுகளின் படங்கள் இஷிகாவாவில் உள்ளன. ஒரு நவீன கட்டடம் இடிந்து விழுந்தது, செய்தி சேனல்கள் அது 1971 இல் கட்டப்பட்டது என்று சுட்டிக் காட்டுகின்றன. இதில் சில பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. பலர் காயமடைந் துள்ளனர்.
ஆனால் பூமியில் வேறு எந்த நாட்டையும் இதுபோன்ற ஒரு நிலநடுக்கம் மிகவும் மோசமாக பாதிக்காமல் இருக்கலாம் என்று நினைப்பது கடினம். போராடித்தான் ஆக வேண்டும்.
No comments:
Post a Comment