2.1.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* வெளி மாநிலங்களில் வழக்குரைஞர்களாக பணியாற்று வோர் மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது, தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஆதார் கார்டு அவசியம் என்ற ஒன்றிய அரசின் ஆணை, ஏழை மக்கள் மீதான மோடி அரசின் புத்தாண்டு கொடூர தாக்குதல் பரிசு என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சட்டப்பிரிவு 370, ஓரினச்சேர்க்கைத் திருமணம் தொடர்பான தீர்ப்புகள் மீதான விமர்சனங்களுக்கு பதில ளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மறுப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் .
தி இந்து:
* தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தியின் பாரத் நியாய நடைப்பயணம் முக்கியமான ஹிந்தியின் மய்யப் பகுதியான உத்தரப்பிரதேசத்தில் கவனம் செலுத்தும்.
தி டெலிகிராப்:
* மீண்டும் மணிப்பூரில் வன்முறை: தவுபாலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பள்ளத்தாக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது
– குடந்தை கருணா
Tuesday, January 2, 2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Tags
# ஏட்டுத் திக்குகளிலிருந்து...
About Viduthalai
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Labels:
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment