சென்னை, ஜன.7 சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகளை அமைச்சர்கே.என்.நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலியில் நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர்சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இவை வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இதைத் தொடர்ந்து, நெம்மேலியில் ரூ.1,516.82 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் திறந்து வைக்கவுள்ளார். இங்கு பெறப்படும் குடிநீரின் மூலம் வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளகரம் – புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பல்லாவரம் பகுதிகள் என 9 லட்சத்துக்கு மேற்பட்டேர் பயனடை வார்கள் என்றார் அவர்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகே யன், சென்னை பெருநகர குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment