சென்னை, ஜன.26- உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் மற்றும் சிறு – குறு – நடுத்தர தொழில் முனைவோருக்குத் தேவையான நிதி தொடர்பான கடன் உதவிகளை பெருமளவில் வழங்கிவரும் இந்தியன் வங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் 9 மாதங்கள் கால அளவிற்கான நிதிசார் முடிவுகளை வெளியிட் டுள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் எஸ்.எல்.ஜெயின் அவர்கள் 24.1.2024 அன்று தெரிவித்திருப்பதாவது:-
கடந்த டிசம்பர் காலாண்டில், பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,119 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-2023ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.1,396 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.4,061 கோடியாக இருந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 2023-இன் அதே காலாண்டில் ரூ.4,097 கோடியாக உயர்ந்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன், தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளை அதிகரித்துள்ளோம். மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வாராக் கடன் விகிதம் 6.53 சதவீதத்திலிருந்து 4.47 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோருக்கான
புதிய நிதித் திட்டம் அறிமுகம்
சென்னை, ஜன.26- தொழில் முனைவோர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு திறன திகாரம் வழங்கும் வகையில் கோடக் செக்யுரிட்டிஸ் நிறுவனம், தனது செயல் தளங்களில் பங்குச் சந்தை வர்த்தகர்களுக்காக ட்ரேட் ஃப்ரீ ப்ரோ என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
சிறப்பம்சங்கள் நிறைந்த, சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான இத்திட்டம், ‘பே லேட்டர்’ என்ற வசதியினை ஒரு ஆண்டுக்கு 9.75 என்ற எளிய வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
தொழில் முனைவோர்கள் பயனாளிகள் 1000 + ஸ்டாக்குகளை வர்த்தகம் செய்யலாம் மற்றும் நான்கு மடங்கு வர்த்தக பங்குகள் மற்றும் செக்யூரிட்டிகளை வாங்கும் திறனை அதிகமாக்கலாம் என இந்நிறுவனத்தின் செயல் அதிகாரி ஜெய்தீப் ஹன்ஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment