'வந்தே பாரத்' ரயில் என்பது பா.ஜ.க.வின் சொத்தா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 1, 2024

'வந்தே பாரத்' ரயில் என்பது பா.ஜ.க.வின் சொத்தா?

featured image

தருமபுரி, ஜன.1, தருமபுரி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது .நிகழ்ச்சிக்கு இடை யூறாக கூச்சலிட்டு தன் கட்சி நிகழ்ச்சி போன்று பிஜேபியினர் ஈடுபட்டது பொதுமக்களையும் பயணிகளையும் முகம் சுழிக்க வைத்தது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி , வாரணாசியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை யும், இரண்டு அம்ரித் பாரத் ரயில்களையும் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதில் கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரயில் தருமபுரிக்கு வருவதையொட்டி ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ரயில்வே உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிஜேபியினர் தன் சொந்த கட்சி நிகழ்ச்சி போன்று கட்சிக் கொடியுடன் சுமார் 50 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரயில் வருவதற்கு முன்பே வரவேற்பு நிகழ்ச்சி துவங்கியது.

அப்போது ரயில்வே துறை உயர் அலுவலர்களும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந் தில்குமார், ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினர்கள் பேசும்போது பிஜேபியினர் மோடி ஜி வாழ்க ,ஜெய் சிறீராம் வாழ்க, ஜெய் காளி வாழ்க, என பேசவிடாமல் கூச்ச லிட்டனர்.
மாணவிகளின் கலை நிகழ்ச் சியில் ராமர், முருகர் பாடல் களை மட்டும் பாடவைத்தனர்.

இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில் தருமபுரி ரயில் நிலையத்திற்கு வந்து போது சிறப்பு விருந்தினர்களை கொடியசைத்து வரவேற்க விடாமல், இவர்களை பின் னுக்கு தள்ளிய பிஜேபியினர், பிஜேபி கொடியசைத்து கூச்ச லிட்டு அலப்பறை செய்து, ரயி லில் வந்த பயணிகளை இறங்க விடாமலும், ஏற விடாமலும் தடுத்தனர்.
மேலும் ரயிலை காணவந்த பொதுமக்களையும், குழந்தை களையும் பின்னுக்கு தள்ளிய பிஜேபியினர், நடைபாதை முன்பும், ரயில் தாண்டவாளத் தில் இறங்கி, ரயில் முன் செல்ஃபி எடுத்து கூச்சலிட்டனர்.

ரயில்வே துறை ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியை, முறையாக நிகழ்ச்சி நடைபெற விடாமல் பிஜேபியினர் கூச்ச லிட்டு அலப்பறை செய்தனர். இந்த நிகழ்வு, அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகள் பயணிகள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

No comments:

Post a Comment