9.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுதலை செய்தது செல்லாது; வழக்கு விசாரணை நடைபெற்றது மகாராட்டிரா மாநிலம் என்பதால், அம்மாநில அரசுதான் உத்தரவு பிறப்பிக்க முடியும்.
♦ குஜராத் அரசு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.
♦ தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உரிய பதில் அளிக்கவில்லை, காங்கிரஸ் கண்டனம்.
♦ டில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மக் களவை இடங்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து இரு கட்சித் தலைவர்களிடையே பேச்சு வார்த்தை; ஜனவரி 14இல் சோனியா, சரத் பவார், உத்தவ் தாக்கரே மகாராட்டிரா மாநிலத்தில், தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவெடுப்பார்கள்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ராமன் பக்திக்கு நாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் இல்லை; பாஜக தனது ஆணவப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உமா பாரதி காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பீகாரில் 17 இடங்களில் போட்டியிட ஜேடி(யு) கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு குறித்து பேச இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து பேச்சு.
தி டெலிகிராப்:
♦பாரத் ஜோடோ என்ற நியாய நடைப்பயணத்திற்கு மணிப்பூர் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கேட்டு காங்கிரஸ் காத்திருப்பு.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment